விசில் அடித்தவர்களை கடவுள் நம்பிக்கையில்லா கம்யூனிஸ்டுகள் என்ற இளையரஜா

தகவல் திருட்டு -பேஸ்புக்கிற்கு 5 கோடி அபராதம்!

யாரிடமும் தோற்காது -பினராயி விஜயன்!

கோவை தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா விசில் அடித்த மாணவர்களைப் பார்த்து கடவுள் நம்பிக்கையில்லா கம்யூனிஸ்டுகள் என்று கடிந்து கொண்டார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இளையரஜாவுடன் ஒரு இசைமாலை என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்காக இளையரஜா கோவை சென்றார். இளையராஜவை புகழ்ந்து மாணவர்கள் பாடல்கள் பாடினார்கள். இளையராஜாவை பார்த்த மாணவர்கள் உற்சாக மிகுதியில் விசில் அடித்துக் கொண்டே இருந்தார்கள். 1974-ஆம் ஆண்டு முகாம்பிகை கோவிலுக்குச் சென்றது பற்றி அவர் பேசிய போது மாணவர்கள் விசில் அடித்தனர். இதனால் கோபம் அடைந்த இளையராஜா மாணவர்களை கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்டுகள் என்றார்.அதன்பின்னர் பல பாடல்களை மாணவர்களிடம் பாடினார். இசை, பாடல் எழுதுவது, இசைக்கோர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இன்று புகழின் உச்சியில் இருக்கும் இளையராஜா கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். அவரது சகோதரருடன் கட்சி பிரச்சார மேடைகளில் பாடல்கள் பாடி வந்தவர். பின்னர் திரையுலகிற்கு வந்த பின்னர் அவரது ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் போட்ட விசில் சத்தமே அங்கீகாரமாக அமைந்தது. ஒரு வரவேற்பை, கொண்டாட்டத்தை, மரியாதையை சாதாரண பாமரன் வெளிப்படுத்தும் வடிவமே விசில். அந்த விசில் சத்தம் இல்லாமல் போயிருந்தால் இன்று இளையராஜா ஏது?

#ilaiyaraja #isaigani_ilaiyarajaa #இளையராஜா #இசைஞானியும்-விசில்_சத்தமும்

இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜெயக்குமார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*