வீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை?

#சபரிமலை பெண்களுக்கு எதிராக பெண்கள் பேரணி!

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

கிரிஜா வைத்தியநாதன் அ.தி.மு.க உறுப்பினரா? -ஸ்டாலின் கேள்வி!

திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: தடுப்பவர்கள் யார்?

சந்தன வீரப்பன் காட்டிக் கொடுக்கப்பட்டு கொல்லப்பட காரணமாக இருந்த பெண் தனக்கு மத்திய மாநில அரசுகள் அறிவித்த உதவித்தொகை கிடைக்கவில்லை என்றும் அதை விரைவில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தமிழக கர்நாடக வனப்பகுதியில் வீரப்பன் செல்வாக்கு செலுத்தி வந்தார். அவரைப்பிடிக்க தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும் அவரது குழந்தைகளும் போலீசாரின் தொல்லைகளை எதிர்கொண்டு வந்தனர். போலீசார் அவர்களை கோவை வடவள்ளி பகுதியில் தங்க வைத்தனர். அப்போது அதிரடிப்படை தலைவராக இருந்த தாமரைக்கண்ணன் வீரப்பன் மனைவியோடு பழகி தகவல்களைச் சேகரித்து போலிசாருக்கு வழங்க கோவை வடவள்ளியைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பெண்ணை முத்துலட்சுமியோடு பழக வைத்தனர். பணத்திற்காக போலீசாருக்கு இன்பார்மர் வேலை செய்த கிருஷ்ணப்பிரியாவின் உள்நோக்கம் தெரியாமல் முத்துலட்சுமி வெள்ளந்தியாக அவரிடம் பழகி தன் கணவர் பற்றி தனக்கு வரும் தகவல்களை சண்முகப்பிரியாவிடம் தெரிவித்து வந்தார். சண்முகப்பிரியாவோ முத்துலட்சுமியிடம் பெற்ற தகவல்களை போலீசாரிடம் விற்று பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார்.

பின்னர் சண்முகப்பிரியா கொடுத்த தகவலின் அடிப்படையில் வீரப்பனை சுற்றி வளைத்த போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும் செய்திகள் உண்டு. வீரப்பனைக் கொன்ற அதிரடிப்படை வீரர்களுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பெரும் பரிசுத்தொகைககளும், நிலமும் வழங்கினார். மத்திய அரசும் பரிசுகள் அறிவித்தது.
ஆனால், சண்முகப்பிரியாவுக்கு எந்த விதமான உதவித்தொகைகளும் கிடைக்கவில்லை. காட்டிக் கொடுக்க உதவிய சண்முகப்பிரியாவை பயன்படுத்தி விட்டு அம்போவென கைவிட்டு விட்டது அரசு. இதற்கிடையில் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் எடுத்த படத்திற்கு தகவல் உதவி செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட சண்முகப்பிரியா அதிலும் தனக்கு உரிய பணம் வரவில்லை என்கிறார்.

மொத்தத்தில் வீரப்பனைக் காட்டிக் கொடுத்த எனக்கு அரசாங்கம் கொடுக்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும் என்பது சண்முகப்பிரியாவின் கோரிக்கை. காலம்தான் எத்தனை எத்தனை அனுபவங்களை மனிதர்களுக்கு விதைச் செல்கிறது.

#வீரப்பன்_கொலை #சந்தன_வீரப்பன் #சண்முகப்பிரியா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*