வேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி!!

நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

சபரிமலை தொடர்பான செய்திகள்

நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு!

வேளச்சேரி எரிக்கரையில் வசிக்கும் வெங்கண்ணா உமா தம்பதிகளுக்கு 35 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நேற்று முன் தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தையைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கிறார்கள். போலீஸ் விசாரணையில் குழந்தையின் தாய் உமாவே குழந்தையைக் கொன்று ஏரியில் வீசிவிட்டதாக வாக்குமூலம் கொடுத்ததின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்து விட்டார்கள்.

உமாவுக்கு கள்ளக்காதல் எதுவும் இல்லை என்பதால் கொடூர தாய் என்பதோடு அந்த செய்தியை ஊடகங்களும் முடித்துக் கொண்டன. ஆனால், உலகம் முழுக்க கர்ப்பகாலத்திலும், கர்ப்பத்திற்குப் பின்னரும் ஏற்படும் ஹார்மோனல் மாற்றங்கள் உருவாக்கும் மன உளைச்சல் பெரும்பலான பெண்களை மனச்சிதைவுக்கு ஆளாக்கி விடுகிறது. சில நேரம் இந்த குறைபாடு  தற்கொலைக்குத் தூண்டும், அல்லது காயங்களை உருவாக்கத் தூண்டும். அது  நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து மாறுபடும். இதை வெல்வதும் இதிலிருந்து மீள்வதும் ஒரு பெண்ணுக்கு அமையும் குடும்பம்,  கணவன், பொருளாதாரம், மகிழ்ச்சி, மாமியார், என சகல வித சூழ்நிலைகளையும் பொறுத்தது.

நான் The Stranger In Me (Das Fremde in mir) என்ற ஜெர்மன் படத்தை பார்த்திருக்கிறேன்.  2008-ம் ஆண்டு வேளியான வெளியானது இந்த படம். இந்த படமே பிரசவத்திற்குப் பிந்தைய ஒரு தாயின் மன, உடல் நிலையை postpartum depression பற்றிய கேஸ் ஸ்டடியாக விஷுவலாக்கி இருப்பார்கள்.

The Stranger In Me (Das Fremde in mir)

The Stranger In Me (Das Fremde in mir)

இந்த படத்தின் நாயகி ரபேக்கா, இந்த கேரக்டரில் சூசன் வோல்ஃ   நடித்திருப்பார்.அவருடைய ஆண் நண்பர் ஜூலியன். ரபேக்கா  தனது முப்பதுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவார்.  பெரிய கனவுகளோடும், ப்ரியங்களோடும் கர்ப்ப காலத்தை கொண்டாடுவாள். அத்தனை இனிமையோடு அவளது கர்ப்பகாலம் கழிகிறது.ஆனால்  குழந்தை பிறந்த பிறகு ரபேக்காவுக்கு தாய்மை உணர்வு இல்லாதது போல உணர்கிறாள். குழந்தையுடன் ஒரு தாய்க்கு இருக்க வேண்டிய பாசப்பிணைப்பு அவளிடம் இல்லை. குழந்தையிடம் இருந்து அந்நியமாகிறாள் தன்னிடமிருந்தும் அந்நியமாகிறாள். பல முறை குழந்தையை கொல்ல முயல்கிறாள். பின்னர் கண்டு பிடிக்கப்பட்டு குழந்தை சில காலம் அவளிடம் இருந்து பிரிக்கப்படுகிறது. அவளுக்கு வழங்கப்படும் தீவிர உளவியல் சிகிச்சைகள்  முதலில் பலனளிக்கவில்லை. பின்னர் படிப்படியாக சிகிச்சை பலனளிக்க தனக்கு வந்துள்ள postpartum depression -ல் இருந்து மீண்டு வருகிறார். ஒரு பெண் பிரசவத்திற்குப் பின்னர் எத்தனை துயரங்களைக் கடந்து வருகிறாள் என்பதை The Stranger In Me (Das Fremde in mir) படம் அளவுக்கு வேறு படங்கள் பேசியிருக்கிறதா எனத் தெரியவில்லை. இதே பிரச்சனையை முன்வைத்து பல படங்கள் வந்த போதும் இந்த படமே என்னை ஈர்த்தது.

வேளச்சேரியில் குழந்தையைக் கொன்று ஏரியில் வீசிய ரபேக்காதான் உமா. பிரசவத்திற்குப் பிந்தைய மன உளைச்சலை PPD என்கிறது மருத்துவ உலகம். Post partum Depression என்பது பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்.  ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜன், புரஜஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்கள் பத்து மடங்கு அதிகம் சுரக்கும். ஆனால், பிரசவம் ஆன பின்னர் 24 மணி நேரத்தில் இருந்து மூன்று நாட்களுக்குள் படிப்படியாக இது  சரியாகி விடும். சரியாகி விட வேண்டும். இது சரிவர நடக்காதவர்கள் மிக மோசமான உடல், மனச்சிதைவுக்கு ஆளாகிறார்கள். இதற்கு ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு காரணமாக இருந்தாலும், புறச்சூழலும் இதற்கு ஒரு காரணமாகிறது. கணவனின் அன்பு, ஆரோக்கியமான குடும்பச் சூழல், கருத்தரிக்கும் வயது, குழந்தையை கவனித்துக் கொள்ள உதவிக்கு ஆள் இல்லாமை, பாரம்பரியமான நம்பிக்கைகளில் இருந்து உருவாகும் மன அழுத்தம் (அதாவது பெண்-ஆண் குழந்தை தொடர்பான அழுத்தங்கள்) சமூகப்பாதுகாப்பின்மையை தாய்மை அடைந்த பெண் உணர்வது என இம்மாதிரி ஹார்மோனல் பாதிப்புகளுக்கு உள்ளாகும் பட்சத்தில் ஒரு பெண் மனச்சிதைவுக்கு ஆளாகிறார். அப்படி மனச்சிதைவுக்கு ஆளாகிறவர்களில் ஆயிரத்தில் ஒருவர் உமாவாக மாறுகிறார்கள். வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் பேறுகால மருத்துவர்கள் கர்ப்பமுற்ற பெண்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இது பற்றி விளக்குவார்கள்.

இந்தியாவில் இது பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவத்துறையில் முன்னேறிய மாநிலமாக கருதப்படும் தமிழகத்திலும் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை. கர்ப்பகாலத்தில் தங்களிடம் வருகிறவர்களுக்கு பல மருத்துவர்கள் இது பற்றி தம்பதிகளை எச்சரித்தாலும், பல மருத்துவர்கள் இது பற்றி தம்பதிகளிடம் பேசுவதில்லை. இதனால், இப்படி ஒரு பிரச்சனை வரலாம் என்பது கூட தம்பதிகளுக்கு தெரிவதில்லை. கர்ப்பமுற்றிருக்கும் பெண்களுக்கு கவுன்சிலிங் அவசியம். இல்லை என்றால் நமது பொதுப்புத்தியில் ஒரு பெண் குழந்தையைக் கொலை செய்தாலே அது கள்ளக்காதல் கொலைதான் என்று பதிந்து விடும். அப்படி எதுவும் இல்லை என்றால் அந்த செய்தியையே எழுத மாட்டோம்.

சரி உமா விஷயத்தை எடுத்துக் கொண்டால். அவர் செய்த கொலையை சட்டம் ஒழுங்கு  பிரச்சனையாக கருத தேவையில்லை.அவரை முழுமையாக மருத்துவப் பரிசோதனைக்கு  உள்ளாக்கினால் PPD தாக்குதலுக்கு அவர் ஆளாகியிருக்கலாம். அப்படி ஆளாகியிருக்கும் பட்சத்தில் அவரை சிறையில் வைப்பதை விட அவருக்கு உரிய உளவியல் சிகிச்சை அளித்து, சட்டத்தின் துணையோடு அவரை விடுதலை செய்வதன் மூலமாக கர்ப்பகால மனச் சிதைவுகள் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்க முடியும். தண்டனைகள் எதற்கும் தீர்வல்ல!

இது தொடர்பான shankar ji -யின் மருத்துவ விபரிப்பு!

# PPD #post_partum_Depression #பிரசவத்திற்குப்_பிந்தைய_மனஉளைச்சல் #Post_Maternity_Depression #postpartum_depression #பிரசவகால_மனஅழுத்தம்.

கட்டுரையாளர்- அருள் எழிலன் -arulezhilan@gmail.com

நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு!

அந்த சிரிப்புக்கு அர்த்தம் என்ன?

திராவிட இயக்கமும் மீனாட்சி தாயாரும்!

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது!

வீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை?

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

குஜராத்தில் இருந்து வெளியேறும் வட மாநிலத்தவர்கள்!

அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்!

பழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*