2 மணி நேரத்திற்கு மேல் வெடித்தால் தண்டனை?

பட்டேல் சிலை திறப்பு –ராகுல் விமர்சனம்! #ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி

பத்திரிகையாளர்கள் கொலை :மோசமான சாதனை படைத்த இந்தியா!

தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பாதால் ஏற்படும் ஓலி மற்றும் சுற்றுசூழல் மாசுபாட்டால் உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு இரண்டே மணி நேரங்கள் மட்டுமே பட்டாசுகளைக் கொளுத்த வேண்டும்  என உத்தரவிட்டுள்ளது.

இரண்டு மணி நேரங்கள் போதாது கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று  தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது.அந்த மனுவில்,

தீபாவளி அன்று புத்தாடைகள் உடுத்தி அதிகாலையே மக்கள் கொண்டாடுவார்கள் எனவே அதிகாலையே பட்டாசு கொளுத்த அனுமதிக்க வேண்டும்.  இரவு மட்டுமே கொளுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும்  நிலையில், இரண்டே மணி நேரத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் பட்டாசு வெடித்தால் கடும் மாசுபாடு ஏற்படும். எனவே இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அதிகாலையில் 4.30 மணி முதல் 6.30மணி வரை பட்டாசு வெடிக்க மக்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். “என்று தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது.

தமிழக அரசின் மனுவை விசாரிட்த்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக்பூஷன்  அமர்வு  கூடுதல் நேரம் கேட்ட தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.  இரண்டு மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும். ஆனால், எந்த நேரம் என்பதை தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம். இதனால் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க அரசு அனுமதியளிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவில் தீபாவளி அன்று காலை 1 மணி நேரம் இரவு ஒருமணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.  அதிகாலை நான்கு மணி முதல் ஐந்து மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையுமே பட்டாசுகள் வெடிக்க முடியும்.

இந்த உத்தரவுகளை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பட்டாசு கொளுத்தும் நேரத்தை அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், இப்போது நேரத்தையும்  வரையறுத்து வெளியிட்டுப்பதால் பட்டாசு ஆர்வலர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பொதுவாகவே தீபாவளி  என்றால் அதற்கு முன் தினம் இருந்தே மக்கள் வெடிகளை கொளுத்தி மகிழ்வார்கள். இந்த ஆண்டு இரண்டு மணி நேரத்திற்கு மேல் வெடித்தால் நடவடிக்கை பாயுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

#Diwali_Pattasu #Diwali  #SupremeCourt

பாஜக தலைவர்கள் தமிழகத்தின் வரப்பிரசாதம் -பெருமித பொன்னார்

கதை திருட்டும் ஒரு மலையாள சினிமாவும் -மருதம்!

பட்டேல் சிலை – “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” தமிழுக்கு மரியாதை செய்த மோடி!

இந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள்-VIDEO!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*