2002-ல் முஸ்லீம்கள் இப்போது வட மாநிலத்தவர்கள்: இது குஜராத் இனவெறி!புகைப்படத் தொகுப்பு!

அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்!

பழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்?

வீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை?

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

குஜராத் மாநிலத்தில் குழந்தை ஒன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்தி பேசும் மக்கள் மீது குஜராத் மாநிலம் முழுக்க தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக வட மாநிலத்தவர்கள் வெளியேறி வருகிறார்கள். சுமார் இருபதாயிரம் பேர் வரை இதுவரை வெளியேறி இருக்கிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-09-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரசிந்திர சாஹு கைது செய்யப்பட்டார். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குஜராத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் இந்தி பேசும் கூலிகள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக குஜராத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். வெளி மாநிலத்தவர்கள் பாதிக்கப்பட்டால் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனாலும், தாக்குதலும் தொடர்கிறது.உயிருக்கு அஞ்சி வட மாநிலத்தவர்கள் குஜராத்தில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.

2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பல்லாயிரம் முஸ்லீம்கள் உயிர்பலி ஆனார்கள். இந்து தேசியவாதத்தின் பெயரால் இந்த படுகொலைகள் நடத்தப்பட்டன. இப்பொது அதே மாநிலத்தில் இந்துக்கள் என்று நம்பப்படும் இந்தி பேசும் மக்களே குஜராத்திகளால் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*