#METOO எனும் பேராயுதம்..!–திருப்பூர் சுகுணாதேவி

எப்படி இருக்கீங்க ஆச்சி?

பயம் காரணமாக ‘ஜெ’ விமானத்தை பயன்படுத்தாத பழனிசாமி; விற்பனை செய்ய முடிவு!

#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு!

கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்

இயேசுவின் உடல் களவாடப்பட்டதா? #Risen -ராஜ்தேவ்

நம் சமூகத்தில் பெண்கள் சிறுவயதிலிருந்தே பற்பல இடங்களில் பற்பல வழிகளில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்தான்.

நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் எதுவும் வெளியில் தெரிவதில்லை. ஏனெனில் பெண்களால் சட்டென்று அவற்றை வெளியில் கூறிவிட முடியாது. அதனால்தான் அதையே பலதரப்பட்ட ஆண்களும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பெண்குழந்தைகள், பெரியவர்களாலும், ஆண்களாலும் சிறு வயதிலிருந்தே அடக்கி ஒடுக்கப்பட்டு, ஒரு கூட்டுக்குள் அடங்கிக் கிடப்பதுதான் வேலை என்ற கட்டமைப்பில் வளர்க்கப் படுபவர்கள் .

பெண்களின் பிறப்புமுதல் இறப்புவரை அவர்கள் மற்றவர்களைச் சார்ந்து வாழும் அமைப்புதான் இன்றளவும் நமது சமுதாய நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது.

பெண்கள் தமக்கு நடந்தவற்றை வெளியில் கூறினால் நம் சமூகம் உடனே உதவிக்கு வந்துவிடுமா என்ன? பதிலுக்கு, சேற்றை வாரி இறைக்கத்தான் தயாராக இருப்பர். அவர்களின் எதிர்கால வாழ்வே கேள்விக்குறி ஆகிவிடும்.

அதுவும் எதிரணியினர், பிரபலமாகவும், அரசியல் பின்புலமாகவும், வசதிபடைத்தவர்களாகவும், ஆளுமை உள்ளவர்களாகவும் இருந்தாலோ கேட்கவே வேண்டாம்.

“அப்போதே ஏன் சொல்லவில்லை ?” என்று கேள்வி கேட்போரெல்லாம் இன்னும் நம் சமூகத்தில் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.

அதுவும் பத்தாண்டுகளுக்கு முன்பே எனில், இன்றைய காலகட்டம்போல் நவீன , பொறியியல் , ஊடக வளர்ச்சி இருந்ததா என்ன? அதுவும் இவற்றையெல்லாம் வெளியில் சொல்வதற்கு உண்டான மனமுதிர்ச்சி, பக்குவம் என எதுவுமே பெற்றிருக்கமாட்டர். மனதைரியம் இல்லா, எத்தனையோ நிராதரவான பெண்களெல்லாம் தற்கொலை
முயற்சியில்கூட ஈடுபட்டிருக்கி
ன்றனர்.

எந்தப் பிரச்சனை எனினும் சமூக வலைத்தளங்களில் ஆளாளுக்கு எகிறுவது என்பது வேறு, அதனை அவர்கள் தமது அன்றாடவாழ்வின் நடைமுறையில் எதிர்கொள்வதென்பது வேறு.

உதாரணத்திற்கு, நம் தமிழகத்தில் இத்தனை கோடிபேர் இருந்தும் மருத்துவமனையினுள் சென்று நம் பெண் ஆளுமையின் உண்மை நிலையினைக் காணமுடிந்ததா என்ன? அதுகூட இன்றுவரையிலும் விசாரணை வலையத்தில்தானே இருக்கின்றது?

ஆக, பெண்ணுக்குத் தக்க பாதுகாப்பும், ஆதரவும், அணுசரணையும் இருந்தால்மட்டுமே அவளால் எதையும் பொதுவெளியில் பகிரமுடியும். இந்த விஷயத்தில் சின்மயி அவர்களின் வீட்டாரை நான் பாராட்டுகிறேன்.

இப்போதாவது தம்மால் எதையும் வெளியில் கூறிவிடமுடியும் எனும் மன உறுதி வந்ததே பெரிய விஷயம்.
இப்படி ஒவ்வொன்றாக #metoo வில் வெளி வந்தாலே போதும், பெண்
குழந்தைகளின்மேல் நிகழ்த்தப்
படும் பாலியல் தொல்லைகள் கணிசமாகக் குறையுமென நான் நினைக்கிறேன். இதுவரையான சட்டமும், நீதியும் குறைக்காததை, இதுவரையான நம் சமூக அமைப்பு ஏற்படுத்தாத பயத்தை ஆண்களுக்கு நிச்சயம் இந்த #METOO இயக்கம் ஏற்படுத்தும்.

வருங்காலத்தில் குழந்தைகளுக்கு, “குட் டச், பேட் டச்”
சொல்லிக்கொடுக்க வேண்டிய அவலம் இருக்காது. குழந்தைகளும் ஒருநாள் பெரியவர்களாகி, #METOO வில் தம்மைப் பதிவிட்டுவிடுவர் எனும் பயம் ஆண்களுக்கு ஏற்பட்டுவிடும்.

மேலும் இது மீடியாத் துறையில் மட்டும்தான் என்று வரையறுப்பது மாபெரும் அறியாமையும், தவறும் ஆகும். நாம் வசிக்கும் வீடு முதற்கொண்டு, கல்விக்கூடம், தொழிற்கூடம், பணியிடம், சாலைவழி, போக்குவரத்து வாகனங்கள், காடுகரை, கிராமப்புறம் என ஒரு இடம் பாக்கியில்லாமல் அனைத்து இடங்களிலும் விரவிக் கிடக்கின்றது.

ஒவ்வொரு பெண்ணிடமும் கட்டாயம் ஒரு நிகழ்வு இருக்கும்.தம்மைச் சார்ந்தோர்களின் மனநலம் கருதி அவ்வளவு எளிதில் யாரும் அதை வெளியில் கூறிவிடமாட்டர்.

மேலும் நாம் இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். முதலில் பெண் பத்திரிகையாளர் சந்தியாமேனனின் ட்வீட்டர் பதிவால் எதேச்சையாக சின்மயி மனம் குமைந்து அதனை வழிமொழிந்தார். அதன்பின்னர்
தான் தொடர்ந்து பல பதிவுகள் வந்தன. ஆகவே, இது ஒரு திட்டமிடப்படாத தற்செயல் நிகழ்வு.எந்த ஒரு திட்டமிடலும் இல்லாத ஒரு இயல்பான வெளிப்பாடு. சம்பவங்களின்
வீரியம்தான் இத்தகு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும் பாவம் சின்மயி, சந்தியாமேனன் போன்றோர் விஷயத்தில்கூட, நிகழ்வையும் அதன் தாக்கத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு, அவர் பிராமின், இவர் திராவிடர், இவர் கிறிஸ்து , அந்த சாதி, இந்த மதம், அந்தக் கட்சி , பணப்பெட்டி, பிறரின் தூண்டல் என மிகவும் கேவலமாகப் பிதற்றுகின்றனர். நன்கு கவனியுங்கள். இவ்வாறு பிதற்றுபவர்கள் அனைவரும் ஆண்களே.

இவை அனைத்தையும் தாண்டி ஒரு பெண்ணுக்கு தமது இளைய வயதில் ஏற்பட்ட மனக்காயம், மனக்குமுறல் என எதுவுமே இருக்காதா என்ன?

-திருப்பூர் சுகுணாதேவி-

(பின் குறிப்பு: இரு பாலரும் பேசிப் பழகி, காதல்வயப்பட்டு, இணைதலே என்றும் இனிமை.ஆனால் எப்படி பலரும் எவ்வித பரஸ்பர அறிமுகம்கூட இல்லாநிலையில், தமது ஆளுமையைவைத்து, உடனடியாக இதற்கு அச்சாரம் போடுகின்றனர்? இது எனக்குள் பலநாட்களாகப் புரிபடாத ஒரு மில்லியன் டாலர் கேள்வி).

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*