#metoo தமிழகப் பார்ப்பனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது- ராஜ் தேவ்

கண்டு கொள்ளாத அரசு உண்ணாவிரதமிருந்து இறந்த ஜி.டி.அகர்வால்!

அதிக விலையில் அதானியிடமிருந்து நிலக்கரி-ஸ்டலின் கண்டனம்!

வைரமுத்துவுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி அது இந்த விவகாரம் ஒரு பனிப்பாறையின் தொடுமுனையளவு மட்டுமே என்பது. 2004 -ல் தனக்கேற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட சின்மயியின் திரை வாழ்வு அதனுடன் முடிந்து விடவில்லை. அவர் திரைத்துறையில் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். அந்த வகையில் அவருக்கு நேரடியாகவும், அவருக்கு தெரிந்த மற்ற பெண்களின் அனுபவமாகவும்

திரைத்துறையின் பல ஆண்களின் அத்துமீறல்கள் தெரிந்திருக்கக்கூடும். ஆனால் வைரமுத்துவை மட்டும் செர்ரி தேர்வு செய்துள்ளார். இங்கு தான் அவரது நோக்கம் நமது சந்தேகத்துக்குரியதாகிறது. பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை லேசாக தடவிய கவர்னரை மன்னிப்பு கேட்க வைத்தது இந்த திராவிட பூமி. இந்த சம்பவம் வட மாநிலம் ஒன்றில் நடந்திருந்தால் அதை பேசுவது ஒரு பெரிய மனிதருக்கு இழைக்கப்படும் அவமரியாதையாக கருதப்பட்டிருக்கும். அடுத்தது நிர்மலா தேவி விவகாரம் வெடித்த பாங்கு. தமிழகத்தின் இந்த விழிப்பு நிலை பார்ப்பனர்களை சித்தப்பிரமை பிடிக்க வைத்துள்ளது. எனவே வஞ்சம் தீர்க்கும் எந்த வாய்ப்பையும் அவர்கள் தவற விட மாட்டார்கள்.

இந்த பிரச்சினையில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அது தமிழகத்தில் அரசியலற்ற பொது அறிவுத்துறையினர் எடுத்திருக்கும் நிலைப்பாடோடு தொடர்புடையது. இன்று பல துறைகளின் வல்லுநர்களாக இருப்பவர்கள் வெளிப்படையாக சாதியம், இந்துத்துவம் தொடர்பாக எதிர்நிலைப்பாடு ஒன்றை எடுத்துள்ளார்கள். உதாரணத்துக்கு மனநல மருத்துவர் ஷாலினி, கர்னாடிக் இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணா, ‘இந்து’ என். ராம், மருத்துவர் ருத்ரன், பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் என்று பலருடைய அரசியல் நிலைப்பாடுகள் இன்று வெளிப்படையான ஒன்று. வைரமுத்துவும் கூட ஆண்டாள் விவகாரத்துக்கு பிறகே பொது விசயங்கள் பலவற்றில் இந்துத்துவத்துக்கு எதிராக பேச ஆரம்பித்தார். ஆண்டாள் பிரச்சினைக்கு பிறகு வைரமுத்துவின் இந்த பரிமாணம் பார்ப்பனர்களுக்கு கூடுதல் எரிச்சலை வழங்கக்கூடியது. இந்த நிலையில் தான் #metoo தமிழகப் பார்ப்பனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது.

சின்மயியிக்கு 2004-ல் பேச முடியவில்லை; இப்போது பேசுகிறார். அதனால் என்ன? என்று கேட்கப்படுகிறது. இங்கே நாம் ஒரு விசயத்தை தெரிந்து கொள்ள முன்வர வேண்டும். திரைத்துறை என்பது வாழ்க்கை நிர்ப்பந்தம் அல்ல. தனக்கேற்பட்ட பாலியல் தொல்லையையும் சகித்துக் கொண்டு தொடர வேண்டிய ஒன்றல்ல அது. இந்த கூற்றை மேலதிகமாக எப்படி புரிந்து கொள்வது? ஒரு மாணவி ஆண் பேராசிரியரின் வழிகாட்டுதலில் முனைவர் ஆய்வு செய்து கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு நேர்கின்ற பாலியல் தொல்லையை சகித்துக் கொண்டு பின்னர் அந்த நபரை அம்பலப்படுத்துவதை புரிந்து கொள்ளலாம். திரைத்துறை என்பது புகழ், மிகுபணம், அதிக வசதி மற்றும் அதிகார போதையை நாடி செல்லும் ஒன்றாக தான் இந்தியாவில் இருக்கிறது. அங்கு நேரும் ஒரு தீங்கை உடனே அம்பலப்படுத்துவது தான் நேர்மையாக இருக்கும்.

சின்மயி பாதிக்கப்பட்டவரின் மனநிலையிலிருந்து இப்போது பேசவில்லை. வைரமுத்துவுக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் அவர் தயாரில்லை. அது தொடர்பான கேள்விக்கு மழுப்பலாக பேசிவிட்டு தப்பித்து விடுகிறார். இன்று அரசியல் மேடை கூர்முனையாகி உள்ளது. திராவிட இயக்கத்தினர், பெரியாரிஸ்ட்கள், இடதுசாரிகள், தீவிர கம்யூனிஸ்ட்களில் ஒரு பிரிவினர் மற்றும் தமிழ்த்தேசியத்தில் சிலர் ஒரு தரப்பாகவும் பார்ப்பனர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள் நேரெதிர் தரப்பாகவும், சில பெயர்ப்பலகை எம்.எல். குழுக்கள், தலித்தியம் பேசும் ஒரு வகையினர் மற்றும் பெரும்பான்மை தமிழ்த்தேசியர்கள் முற்போக்கு முகாமின் ஒற்றுமையை சீர்குலைக்கும் தரப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். சின்மயியின் குற்றச்சாட்டு இந்த அரசியல் முனைவாக்கத்திலிருந்து கடந்த ஒன்றல்ல.

#Metoo #சின்மயி #பாலியல்புகார்கள் #தமிழ்நாடு_பிராமணர்சங்கம் #வைரமுத்து

பயம் காரணமாக ‘ஜெ’ விமானத்தை பயன்படுத்தாத பழனிசாமி; விற்பனை செய்ய முடிவு!

#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

 

#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு!

கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்

இயேசுவின் உடல் களவாடப்பட்டதா? #Risen -ராஜ்தேவ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*