#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு!

கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்

இயேசுவின் உடல் களவாடப்பட்டதா? #Risen -ராஜ்தேவ்

#metoo என்ற ஹேஷ் டேகில் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், தமிழ் சூழலில் பாட்கி சின்மயி பெரிதும் கவனம் ஈர்த்துள்ளார்.
வைரமுத்து தன்னை சுவிட்சர்லாந்தில் வைத்து தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளதன் தொடர்ச்சியாக பல கர்நாடக இசைக்கலைஞர்களின் மீதும் தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இதனால், கர்நாடக இசைத்துறையிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சின்மயிக்கு சாதி ரிதியான நோக்கங்களோ, அல்லது அரசியல் ரீதியான நோக்கங்களோ இல்லை என்பது தெளிவாகிறது.

நாராயணன்
நாராயணன்

அவர் வெளியிட்டுள்ள பட்டியலில் பி.எம்.சுந்தரம். பப்பு வேணுகோபால் ராவ், சுனில் கோத்தாரி, லோகானந்தா ஷர்மா, டி.என். சேஷகோபாலன், சசிகிரன். ரவிகிரன் போன்ற கர்நாடக இசைக்கலைஞர்களின் பெயரும் உள்ளது. இதில் ரகு தீக்‌ஷித் என்ற கலைஞர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இது தொடர்பாக திராவிடர் இயக்க சிந்தனையாளர் அருள் மொழி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்:-
தங்கள் சாதி ஆட்கள் தவறு செய்தால் அவர்கள் மீது பழிவராமல் பாதுகாப்பதுதான் பார்ப்பனர் இயல்பு.. அதையும் உடைக்கிறார் சின்மயி.
இன்னும் யார் யார் மீது பாலியல் புகார்கள் சொல்லப்படுகின்றன என்று அவர் வெளியிட்டுள்ள பட்டியலில் இருக்கும் அனைவரும் கர்நாடக இசைத்துறையில் புகழ்பெற்ற பார்ப்பனர்கள். எனவே கவர்னரைக் காப்பாற்ற திசைதிருப்பல் என்ற காரணம் எல்லாம் பொருந்தவில்லை தோழர்களே.காலம் கடந்த குற்றச்சாட்டு என்பதால் மட்டுமே அது பொய் என்று சொல்லி விட முடியாது.
மேலும் ஒரு பதிவில்
கொஞ்சம் நிதானமாக சிந்திக்க வேண்டிய நேரம்.
பார்ப்பனர்களை மட்டுமே அம்பலப்படுத்த வேண்டும் அது மட்டுமே பெரியாரியம் என்று நம்பும் தோழர்கள் சின்மயியின் ட்விட்டர் #metoo பட்டியலில் வந்து பெண்கள் வெளியிடும் பார்ப்பனர்களின் பெயர்களை பெரிதாக வெளியிடுங்கள்..
பிரபலப்படுத்துங்கள். அவர்கள் பெயர்களை வெளியிடுபவர்களும் பார்ப்பனப் பெண்களே.
என்று கோரிக்கை வைத்துள்ளார்.

உச்சமாக இப்போது பாலியல் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாரயணன். தாம்ப்ராஸ் எனப்படும் பிராமணர் சங்கத்தின் இப்போதைய தலைவராக இருப்பவரும் இவரே.

வேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி!!

நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

#metoo #சின்மயி #கர்நாடக_இசைக்கலைஞர்கள் ##metoo #சின்மயி #பாடகி_சின்மயி #கர்நாடக_சங்கீதம் #கவிஞர்_வைரமுத்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*