#Metoo பொய் குற்றச்சாட்டு :சின்மயி மீது கல்யாண் மாஸ்டர் வழக்கு?

“நிச்சயம் அய்யப்பனை தரிசிப்பேன் ” :விரதமிருக்கும் கேரளப் பெண்!

மனுசங்கடா’ படம் பற்றி மனுஷ்யபுத்திரன்!

சேலம் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு!

சிறையில் நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து?

நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டர் மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இதனால், மீடு இயக்கத்தின் தமிழக ஏஜென்சியை எடுத்திருந்த சின்மயிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று தெரிகிறது.
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய சின்மயி அடுத்தடுத்து பல பாலியல் புகார்களை பலரிடமும் இருந்து பெற்று வெளியிட்டு வருகிறார். பாடகர் ரகு தீக்சித் தொடர்பாக அவர் வெளியிட்ட தகவலுக்கு ரகு தீக்சித் மன்னிப்புக் கேட்டதும் மேலும் சின்மயிக்கு கிரேஸ் கூடியது. தொடர்ந்து பல விடியோக்களையும் வெளியிட்டு களமாடி வருகிறார். இந்நிலையில், தமிழில் முன்னணி நடன இயக்குநரான கல்யாணம் மாஸ்டர் ஒரு நடனம் பயில வந்த இலங்கைப் பெண்ணிடம் சில்மிஷம் செய்தார் என்று ஒரு டுவிட்டை வெளியிட்டார் சின்மயி.இது கல்யாண் மாஸ்டரின் பெயரை பொதுவெளியில் கெடுத்ததோடு, அவரது குடும்பத்திலும் பல பிரச்சனைகளை உருவாக்கியது.
ஆனால், கல்யாண் மாஸ்டர் மீது இலங்கைப் பெண் கூறிய புகாரில் உண்மையில்லை. அது விளையாட்டாகச் சொல்லப்பட்டது. என அனுப்பிய நபர் கூறியிருக்கிறார். சின்மயி யார் என்ன அனுப்பினாலும் அதை பரிசோதிக்காமல் வெளியிட்டு வருகிறார். என்றும் அந்த தகவலை வெளியிட்டவர் கூறியிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடகி சுசித்ரா வீடியோ, மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் பல தகவல்களைப் பகிர்ந்த போதும் அவரை மன நோயாளி என்று சித்தரித்தார்கள். சினமயியும் அவரை மனநலப்பாதிப்பில் வெளியிட்டதாகத்தான் கூறினார்.ஆனால்,இப்போது சின்மயி வெளியிடும் தகவல்களின் நம்பகத்தன்மை தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளது.
சின்மயின் ட்விட்டால் பாதிக்கப்பட்ட கல்யாண் மாஸ்டர் சின்மயி மீது வழக்குத் தொடர்வது பற்றி ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

#metoo #சின்மயி #கல்யாண்_மாஸ்டர் #பாலியல்-புகார்கள்

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக செய்திகள்

இராணுவ அமைச்சர் பிரான்ஸ் சென்றது ஏன்? -காங் கேள்வி! 

#metoo போராளிகள் தடுமாறுகிறார்கள்-கார்ல் மார்க்ஸ் கணபதி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*