#Metoo மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய் கைது!

அதிக விலையில் அதானியிடமிருந்து நிலக்கரி-ஸ்டலின் கண்டனம்!

பயம் காரணமாக ‘ஜெ’ விமானத்தை பயன்படுத்தாத பழனிசாமி; விற்பனை செய்ய முடிவு!

#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

#Metoo என்ற கேஷ் டேக் பிரபலமாகி பல பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை கூறி வரும் நிலையில்,சென்னையில் மகளுக்கு தாய் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சிக்கு காரணம் ஆண்கள்தான் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பார்கள். கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு வித்தியாசத்திற்கு ஒரு தாய் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது தகப்பனுக்கு மட்டுமல்ல வாசகனுக்கும் டென்சனை கூட்டி விடுகிறது.
பழம் பெரும் திரைப்பட இயக்குநரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தில் ஒரு போலீஸ் சூப்பிரெண்டெண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர், இப்படி பல பாரம்பரீயங்களைக் கொண்டதும், பெருமை மிக்கதுமான என் குடும்பத்தில் அதிர்ச்சிகரமான ஒன்று நடந்து விட்து. சென்னைப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதே நிரம்பிய என் மகளை தகாத உறவுக்கு அழைத்திருக்கிறார். அதற்கு ஒத்துழைக்கா விட்டால் கொன்று விடுவதாக மிரட்டுகிறார் என்பதுதான் அந்த புகார்.
புகார் அழித்தவர் மாமியாரும் இதற்கு உடந்தை என்று மனைவியோடு மாமியாரையும் சேர்த்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே தாய் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மகள் ஒத்துழைக்காத நிலையில் மகளை கொன்று விடுவதாகவும், கொல்லத்துணிந்து விட்டதாகவும் புகார் மனுவில் தெரிவித்ததையடுத்து. இந்த புகாரை ஏற்ற தேனாம்பேட்டை மகளிர் காவல்துறையினர் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்கள். தலைமறைவான பெண்ணையும் மாமியாரையும் கும்பகோணத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
கணவன் மனைவி இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததா என்பது தெரியவில்லை. மீ டூ ஹேஷ்டேக் பிரபலமாகி வரும் நிலையில் மகளுக்கு தாயே பாலியல் தொல்லை கொடுத்திருப்பதுதான் உங்களுக்கு அதிர்ச்சியாகவோ அதிர்ச்சியற்ற ஒன்றாகவோ இருக்கலாம்.

#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு!

கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்

இயேசுவின் உடல் களவாடப்பட்டதா? #Risen -ராஜ்தேவ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*