#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு!

ரபேல் ஊழல் சில செய்திகள்

இயேசுவின் உடல் களவாடப்பட்டதா? #Risen -ராஜ்தேவ்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை இணைத்துக் கொள்ளா மோடி தலைமையிலான மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது என பிரான்ஸ் ஊடகம் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த 2016-ஜனவரி மாதம் பிரான்ஸ் நாட்டில் இருந்து 59 ஆயிரம் கோடி அளவிலான 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொள்வனவு செய்ததை விட அதிக தொகை கொடுத்து விமானங்களை வாங்குவதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தி பெருமளவு ஊழல் நடந்திருக்கிறது என நாடாளுமன்றத்திலேயே காங்கிரஸ் குற்றம் சுமத்தியது.
அரசு நிறுவனமன ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் நீக்கப்பட்டு ரிலையன்ஸ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்ட உண்மையை காங்கிரஸ் வெளியில் கொண்டு வந்துள்ளது.விமானக் கொள்முதலில் எந்த விதமான முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் அரசுடன் கையொப்பம் ஆவதற்கு 12 நாட்கள் முன்புதான் “ரிலையன்ஸ் டிபென்ஸ்’ என்னும் நிறுவனமே துவங்கப்பட்டுள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் நடைபெற்ற பொது பிரான்ஸ் அதிபர் ஹெலாண்டேவின் காதலியை வைத்து ரிலையன்ஸ் நிறுவனம் படம் தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொண்ட செய்தியை ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம் பிரான்ஸ் நாட்டில் பூதாகரமாக வெடிக்க இருக்கிறது. இதில் இந்தியாவை ஆளும் பாஜக அரசும், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானியும் பெரிய சர்ச்சைக்குள் சிக்க இருக்கிறார்கள்.
இந்த சர்ச்சைகள் நீடித்து வந்த நிலையில் அனில் அம்பானியில் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை இந்த வர்த்தகத்திற்குள் கொண்டு வந்தது பிரான்ஸ் நிறுவனமான டஸ்சால்ட் நிறுவனத்தின் பங்குதாரராக ரிலையன்ஸ் டிபென்ஸ் இணைக்கப்பட்டது தொடர்பாக கருத்து வெளியிட்ட முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே “ரிலையன்ஸ் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டும் என இந்திய அரசுதான் கூறியது” என்றார்.இந்த கருத்து மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கி நிலையில், இப்போது பிரான்ஸ் நாட்டின் பிரபல புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியா பார்ட் (Mediapart) என்ற இதழ். இந்தியாவுக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையில் நடந்த ரபேல் ஒப்பந்தம் பற்றி மிக முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் அனில் அம்பானியில் ரிலையன்ஸ் டிபென்ஸ் இந்த ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும் என இந்திய அரசு சார்பில் நிர்பந்திக்கப்பட்டதாக தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் இந்த ஒப்பந்தத்தின் பிரான்ஸ் தரப்பு நிறுவனமான டஸ்சால்ட் நிறுவனத்தோடு ரிலையன்ஸ் டிபென்ஸ் பங்குதாரராக இணைத்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்த ஆவணங்களிலேயே இந்த தகவல் உள்ளது என்ற செய்தியை அது வெளியிட்டுள்ளது.
#Media_Part #RafaleDeal #ரபேல்_ஊழல் #ரஃபேல்_ஊழல் #மோடி_ஊழல் #ரிலையன்ஸ்_டிபென்ஸ் #மெகா_ரபேல்_ஊழல்

 

நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

#இந்தியா_சீனா #இந்தியா_மீது_பொருளாதாரத்தடை #அமெரிக்கா_பொருளாதாரதடை #Mera_PM_Chor_Hai

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*