அனைத்து மாநிலங்களிலும் திரிணாமூல் காங்கிரஸ் போட்டி!

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது எங்கள் கடமை -பினராயி விஜயன்!

மைச்சரை துரத்திய கிராம மக்களுக்கு சோறு தண்ணீர் செல்லாமல் தடுத்த அதிமுகவினர்!

கஜா சிதைத்த காவிரி டெல்டா -கருத்துக்கணிப்பு!

மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களுக்கும் கட்சியை விரிவு படுத்தும் நோக்கோடு வரவிருக்கும் தேர்தல்களில் அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடும் என அதன் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள மம்தா பானர்ஜி தீவிர மோடி எதிர்ப்பாளராகவும், பாஜக எதிர்ப்பாளராகவும் உள்ளார். 30 ஆண்டுகளாக மேற்குவங்கத்தில் நடந்து வந்த மார்க்சிஸ்டுகளின் ஆட்சியை வீழ்த்தி கடந்த இரண்டு தடவைகளாக மம்தா ஆட்சியில் அமர்ந்துள்ளார். மேற்குவங்கத்தையும் தாண்டி வங்கதேச எல்லையோரப் பகுதிகளிலும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு உள்ளது.
மேற்குவங்கத்தைக் கடந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேறு மாநில தேர்தல்களில் கவனம் செலுத்த வில்லை. ஆனால், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடுவதன் மூலம் தேசிய அரசியலில் கூடுதல் கவனம் கிடைக்கும் என நம்புகிறார் மம்தா பானர்ஜி. இப்போது மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கும் மம்தா பானர்ஜி வரவிருக்கும் தேர்தலில் இன்னும் அதிக தொகுதிகளில் வெல்ல நினைக்கிறார். இது தொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி :-
“காவிகளின் தாக்குதலில் இருந்து மக்களைக் காக்க அண்டை மாநிலங்களிலும் போட்டியிட இருக்கிறோம். ஜார்கண்ட் மாநிலத்தின் மக்களவை, சட்டமன்ற தேர்தல்களிலும் போட்டியிட இருக்கிறோம். அசாம், மற்றும் ஒடிசாவிலும் எங்கள் கட்சி களமிரங்கும். ஜார்கண்டில் பாஜக பழங்குடி மக்களைத்தாக்குகிறது. பழங்குடிகளின் நிலங்களை பாஜக அபகரிக்கிறது. பழங்குடிகளுக்காக போராட எங்கள் குழுவை அங்கு அனுப்பியுள்ளோம். எங்கள் போராட்டம் தொடரும்.அசாம் மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிராக களமிரங்குவோம்” என்று கூறினார் மம்தா பானர்ஜி.
#மம்தா-பானர்ஜி #Mamtha_banarji #West_Bengal #bjp_vs_mamtha

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*