அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு தனி தலைமைச் செயலகம் -சுயாட்சிக்கு ஆபத்து!

திமுகவை விரும்பும் காங் -தேசிய அளவில் முக்கியத்தும பெறும் திமுக!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் தலைமைச் செயலகத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மாநில அரசுகளை கண்காணிக்க ஆளுநர் என்ற பதவி இருப்பது போல, மத்திய அரசின் இந்த தலைமைச்செயலகங்கள் ஒவ்வொரு மாநிலத்தையும் நேரடியாக ஆட்சி செய்யும் சூழல் உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த அரசுகளுக்கென மாநில தலைமைச் செயலகங்கள் உள்ளன. அதில், மாநில முதல்வர் தலைமையில், அமைச்சர்கள் பணி செய்து மாநில நிர்வாகத்தை நடத்துகிறார்கள். இவர்களை மக்கள் வாக்களித்து தெரிவு செய்கிறார்கள். நிர்வாகத்தை நடத்திச் செல்லும் அரசு அதிகாரிகள் அரசின் நியமனமாகவும், தீர்மானிக்கும் இடத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களும் உள்ள நிலையில்,
மத்திய அரசும் ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமைச் செயலகங்களை திறக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. இதை அடுத்து மத்திய தலைமைச் செயலகம் கட்ட நிலம் கையகப்படுத்தும் வேலையை துரிதப்படுத்தியுள்ளது மத்திய பொதுப்பணித்துறை. நிலம் தொடர்பான விபரங்கள் இறுதி ஆன பின்னர் நகர்ப்புற வீட்டுவசத்துறையும் முறையான செலவுத் திட்டங்களை சமர்ப்பித்து விரைவில் கட்டிட பணிகளை துவங்கும் என தெரிகிறது.
ஏற்கனவே மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு.மாநிலங்களை நேரடியாக கடுப்படுத்தும் விதமாக மத்திய தலைமைச் செயலகத்தை அமைப்பது மாநில உரிமைகளில் தலையீடு செய்யும் நடவடிக்கையாக இருக்கலாம்.

#State_autonomy #The_Secretariat #central_Secretariat #மாநிலசுயாட்சி #மத்திய_தலைமைச்_செயலகம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*