
கஜா சிதைத்த காவிரி டெல்டா -கருத்துக்கணிப்பு!
ரகசியமாக திட்டமிட்டு தருமபுரி குற்றவாளிகளை விடுதலை செய்த அதிமுக அரசு!
தருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல்?
#Gaja_cyclone பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் எடப்பாடி எஸ்கேப் ஆவது ஏன்?
ஏமாந்த எதிர்கட்சியும், மக்களும்!
கஜா புயல் பாதிப்பால காவிரி டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், ஆளும் கட்சி அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் ஆங்காங்கே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பெரும் இடரை சந்திக்கும் மக்கள் கொதிப்பில் இத்தகைய எதிர்ப்புகளை பதிவு செய்தாலும் அரசு நிர்வாகத்தின் உதவியை எதிர்பார்த்து மக்கள் பரிதவிப்பில்தான் உள்ளார்கள். இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியனை நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு என்ற ஊரில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில வாகனங்களும் தாக்கப்பட்டு அமைச்சரும் தப்பி ஓடினார். அதன் பின்னர் இந்த கிராமத்திற்கு எந்த நிவாரணங்களும் சென்று சேர வில்லை, அரசு அதிகாரிகளும் எட்டிப்பார்க்கவில்லை. உணவு, குடிநீர், மின்சாரம் என எதுவும் இல்லாமல் மக்கள் கைவிடப்பட்டுள்ளார்கள்.
அமைச்சர் மணியனை தாக்கிய கிராமம் என்பதால் அதிமுகவினரே இந்த கிராமங்களுக்கு நிவாரணங்கள் சென்று சேராமல் அதிமுகவினர் தடுத்து வருவதோடு, அதிகாரிகளும் இந்த கிராமங்களுக்குச் செல்வதை தவிர்த்து வருவதால் இந்த ஊர் மக்கள் பெரும் கவலையில் உள்ளார்கள். அப்பகுதியில் இருந்து பத்திரிகையாளர் ஷபீர் அகமது வெளியிட்டிருக்கும் பதிவுஅங்குள்ள நிலமையை நமக்கு உணர்த்துகிறது.
#EscapeEdapadi #Gaja_cyclone #Dailythanthi #தினத்தந்தி #Dina_Thanthi #செம்போடை #sempodai #save_kaviri_delta
Be the first to comment