இலங்கையில் தமிழர் தரப்பு பலமடைந்துள்ளாதா?

Tamil National Alliance leader Rajavarothayam Sampanthan speaks during a media briefing in Colombo, Sri Lanka, Tuesday, Dec. 30, 2014. Sri Lanka's main ethnic Tamil political party said that it will support opposition candidate Maithripala Sirisena in January's presidential election, in the latest blow to Mahinda Rajapaksa's bid for a third term in office. (AP Photo/Eranga Jayawardena)

#TNPSC தேர்வுகள் வேறு மாநிலத்தவர்களை பணியமர்த்த சதி?

சி.பி.ஐ ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல- நீதிபதி செலமேஸ்வர்!

தோல் வியாதிகள் பற்றி டாக்டர் சிவராமன்! #உடல்நலம்#skin_diseases

இலங்கை அரசியலில் சிங்கள அதிகார பீடங்களுக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை கூர்மையாக பயன்படித்திக் கொள்ளும் வாய்ப்புகள் தமிழர் தரப்புக்கு உருவாகி உள்ளதாக கருதினாலும், அவற்றை எந்த நிலையில் நின்று பயன்படுத்திக் கொள்வது என்ற குழப்பமும் காணப்படுகிறது.
இலங்கை அதிபர் சிறிசேனா பிரதமர் ரணில் விக்கிரசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இது இலங்கைக்குள் அரசியல் குழப்பத்தையும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கியுள்ள நிலையில், நவம்பர் 16-ம் தேதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்தார்.
இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பிக்கள் உள்ளனர். பிரதமராக நீடிப்பதற்கான மெஜாரிட்டை நிரூபிக்க 113 எம்.பிக்களின் ஆதரவு வேண்டும். ரணில், ராஜபக்சே இருவருமே பெரும்பான்மை இருப்பதாக கூறப்படும் நிலையில். ராஜபக்சேவுக்கு 96 எம்.பிக்களும், ரணிலுக்கு 115 எம்.பிக்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பான்மையை ராஜபக்சே நிரூபிக்க இன்னும் 18 எம்.பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்நிலையில் தான் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 21 எம்.பிக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உள்ளார்கள். இவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்பதாக அறிவித்தாலும் இவர்களில் சிலர் ராஜபக்சே தரப்போடு இணைந்து விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் மனதை மாற்றி அவர்களை தங்கள் பக்கம் இழுக்க சிறையில் உள்ள அரசியல் கைதிகளை துருப்புச் சீட்டாக பயன்படுத்த ராஜபக்சே தரப்பினர் விரும்புகிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீண்ட நாட்களாக அரசியல் கைதிகள் விடுதலையை கோரி வருகிறார்கள்.
இதையே ராஜபக்சேவின் மகன் நமால் ராஜபக்சே சிறையில் உள்ள தமிழ் போராளிகள் தொடர்பாக சிறிசேனாவும், ராஜபக்சேவும் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள் என அறிவித்துள்ளார்.
ஆனால், கடந்த காலங்களில் ரணில், ராஜபக்சே, சிறிசேனா என மூவருமே தமிழ் அரசியல் கைதிகளை விடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர்கள். இப்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெல்வதற்காக அரசியல் கைதிகள் என்ற நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். அரசியல் கைதிகள் விடுதலை என்ற வாக்குறுதியை நம்பி நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சேவை ஆதரித்தால் அவர்கள் வென்ற பிறகு நீதிமன்றத்தினூடாக தடையை ஏற்படுத்தி அரசியல் கைதிகள் விடுதலையை கிடப்பில் போட முடியும்.
இலங்கையின் இன்றைய சூழல் தமிழர் தரப்புக்கு பேரம் பேசுவதற்கான வலியைக் கொடுத்துள்ளது. ஆயுதப் போராட்டம் நடந்த காலங்களிலும் இதே வலிமையை தமிழர் தரப்பு பெற்றிருந்தது. ஆனால், காலந்தோறும் சிங்கள மேலாதிக்காவாதிகள் தமிழர்களை ஏமாற்றியே வந்திருக்கின்றனர்.
அந்த அனுபவங்கள்தான் அவ நம்பிக்கையை அரசியல் களத்தில் விதைத்திருக்கிறது.

‘2.0’ ரஜினி -ஷங்கர் ட்ரெய்லர்!

#நிர்மலாதேவி விவகாரம் -“யாரோ சிலரை காப்பாற்றுகிறார்கள்” -பேரா. மனைவி குற்றச்சாட்டு!

#eelam_news #srilanka_news #tamil_political_prisoners #தமிழ்_அரசியல்_கைதிகள் #ஈழம் #ஈழத்தமிழர்கள் #தமிழ்தேசியகூட்டமைப்பு #சம்பந்தன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*