இலங்கை பாராளுமன்றத்தைக் கலைத்தார் சிறிசேனா!

சந்திப்பு பற்றி ஸ்டாலின்!

சந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் சந்திப்பு முழுமை பெற்றது நாடு தழுவிய கூட்டணி!

#Sarkar_politics இலவச பொருட்களை நொறுக்கும் விஜய் ரசிகர்கள்!

பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் பாராளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார் அதிபர் சிறிசேனா.
இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் மோதல் வெடித்த நிலையில் தீடீரென ராஜபக்சேவை பிரதமராக்கினார் சிறிசேனா.ஆனால், “நான் தான் இன்னும் பிரதமர்” என்று ரணில் அறிவிக்க, ராஜபக்சே, ரணில் இருவருமே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சபாநாயகர் கரு ஜெயசூரியா ரணிலை பிரதமராக ஏற்றுக் கொண்ட நிலையில் பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார் ரணில்.நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருந்த அதிபர் சிறிசேனா 14-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என அறிவித்தார்.அவை கூடும் போது பெரும்பான்மையை ராஜபக்சே நிரூபித்தாக வேண்டிய நிலையில் அவரால் பெரும்பான்மையை நீரூபிக்க போதுமான எம்.பிக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் பெரும்பான்மை பலத்தை ராஜபக்சேவால் நிரூபிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில். அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைப்பார் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டனர்.
ராஜபக்சேவும் பாராளுமன்றத்தைக் கலைக்க வைப்பேன் என்று முன்கூட்டியே பேசியிருந்தார். அது இன்று நிறைவேறியிருக்கிறது. அதிரடியாக இன்று இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
#sirisena #ranilwickremesinghe #srilankaparliament #EELAM_TAMILS #ஈழத்தமிழர்கள் #இலங்கைதமிழர்கள்

சபரிமலைக்குச் செல்ல நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் மனு!

’சர்கார்’ இயக்குநர் முருகதாஸ் முன் ஜாமீன் மனு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*