உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது எங்கள் கடமை -பினராயி விஜயன்!

sabarimala-issue

மைச்சரை துரத்திய கிராம மக்களுக்கு சோறு தண்ணீர் செல்லாமல் தடுத்த அதிமுகவினர்!

கஜா சிதைத்த காவிரி டெல்டா -கருத்துக்கணிப்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது அந்த  தீர்ப்பை அமல் படுத்த கேரள மாநில அரசு முயன்ற நிலையில், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் பெண்களை அனுமதிக்கக் கூடாது  என்று போராடி வரும் நிலையில் இது கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் அரசுக்கு நெருக்கடியாக மாறியிருக்கிறது. கேரள காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் கூட்டு சேர்ந்து ஆளும் இடது அரசை தாக்கி வரும் நிலையில்,  இது பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் “ அய்யப்ப பக்தர்களுடன் எனது அரசு நிற்கிறது. அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்தும் தீர்ப்பை உச்சநீதிமன்றம்  வழங்கியது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த முயற்சி செய்தமைக்காக என்னுடைய அரசை குறிவைக்கிறார்கள். சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக  எங்கள் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவது அரசியலமைப்பு உரிமையை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. எமது அரசு அய்யப்பபகதர்களுக்கு எதிராக இருப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.  உச்சநீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்படும், ஆனால், சங்கப்பரிவாரங்களின் கொள்கை கேரளத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது” என்றார்.

#pinarayi_vijayan #Kerala_cm_speech #sabarimalatemple #sabarimala#sabarimala_Verdict #SabarimalaTemple #SabarimalaProtests#SabarimalaDebate #சபரிமலை_அய்யப்பன்_பாடல்#sabarimala_iyyapan_song #ஐய்யப்பன்_பாடல் #sabarimla_song

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*