எழுவர் விடுதலை முடிவெடுக்காமல் தள்ளிப்போடும் ஆளுநர்?

ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு!

நிர்மலா தேவி வாக்குமூலமும் ரகசிய விசாரணையும்?

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ம.நாடராசனின் நிலை!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் அது தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி தமிழக ஆளுநருக்கு எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை முடிவை அனுப்பி வைத்தது.ஆனால் 50 நாட்கள் ஆகியும் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
ஆனால், சமீபத்தில் தமிழக அரசு அதிமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள் சிலரை விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு மனு அனுப்ப அவர் அந்த மனுவை நிராகரித்து விட்டார். தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவை சத்தமில்லாமல் முடிவெடுத்து அதையும் ஆளுநருக்கு பரிந்துறைத்தது. ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி உள்ள எழுவர் விடுதலை என்பது தமிழக மக்களின் கோரிக்கை. அவர்கள் விடுதலைக்காக மக்கள் இயக்கங்கள் இங்கு கட்டப்படுள்ளது.
ஆனால், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கக் கோரியதையும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்கக் கோருவதையும் ஒன்று போல கருத முடியாது என்னும் நிலையில், ராஜீவ் கொலையான போது அந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள்.அது போல காங்கிரஸ் கட்சியினரும் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். அந்த வழக்குகள் முடிந்த பின்னரே எழுவர் விடுதலை தொடர்பான முடிவை எடுக்குமாம் ஆளுநர் மாளிகை.
எழுவர் விடுதலை தொடர்பாக சட்டரீதியாக இருந்த நடைமுறைகள், தடைகள் தகர்ந்து விட்ட நிலையில் முட்டுக்கட்டை போட வேண்டும் என்றே இவர்களின் விடுதலையை தாமதிப்பதாக கூறப்படுகிறது.

#எழுவர்_விடுதலை #ராஜீவ்காந்தி #Rajiv_Gandhi #perarivalan #Arputhammaal #அற்புதம்மாள்

#ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் ராமர்கோவிலை முன்னிறுத்தும் பாஜக?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*