‘ஒக்கி’ புயலில் கோட்டை விட்ட தமிழக அரசு ‘கஜா’ புயலில் ஸ்கோர் பண்ணியது?

டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்த இந்துத்துவ அமைப்புகள்?

சபரிமலை பெண்வழிபாடு -தோல்வியில் முடிந்த அனைத்துக்கட்சி கூட்டம்!

டிச -16 கருணாநிதி சிலை திறப்பு- அகில இந்திய தலைவர்கள் வருகை!

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடம்?

ஓக்கி புயலில் எந்த விதமான மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத காரணத்தால் 194 மீனவர்கள் உயிரிழந்த நிலையில் ‘கஜா’ புயலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திவீரமாக்கியதால் கஜா புயலில் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.
வங்க கடலில் உருவான கஜா அதி தீவிர புயலாக மாறி நாகை அருகே கரையைக் கடந்தது. கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களுக்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கி விட்டலும், கஜா புயலின் பாதிப்பு பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. புயல் பாதிக்காது என நினைத்த திருச்சி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கஜாவின் தீவிரத்தைக் காண முடிகிறது.
கஜா புயலில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என்ற போதிலும், கஜா புயலின் தீவிரத்தை முன்கூட்டியே கணிக்கத் தவறியிருந்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்க நேரிட்டிருக்கும், எனவே தமிழக அரசு முன்கூட்டியே உஷாராக எடுத்த நடவடிக்கைகள் பாராட்டைப் பெற்றுள்ளது. ஆனால், இதே அரசுதான் ஓக்கி புயல் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கவில்லை. முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை.
விளைவு குமரி மாவட்டத்தை ஓக்கி புயல் புரட்டிப் போட்டதோடு குமரி மாவட்டம், கடலூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 194 பேர் மீட்க ஆளில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இது தமிழக அரசுக்கு அவமானமாக அமைந்தது.
மீனவர்களை மீட்க விமானப்படையின் உதவி தேவை. ஆனால், மத்திய அரசு, மாநில அரசுக்குமிடையில் போதுமான ஒருங்கிணைப்பு இல்லை. மேலும் சமவெளியில் மீட்பு நடவடிக்கை என்பது ஒருங்கிணைத்தால் சாத்தியமாகும் ஆனால், கடலுக்குள் மீட்பு நடவடிக்கை என்பது மத்திய மாநில அரசுகள் இணைந்து செய்ய வேண்டிய நடவடிக்கை. அதனால்தான் ஓக்கி புயல் மீட்பில் அரசு தோல்வியடைந்தது.
என்றாலும் கஜா புயலில் அந்த அனுபவத்தை எடுத்துக் கொண்டு முன்கூட்டியே துரிதமாக நடவடிக்கை எடுத்ததால் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

#ockhi_cyclone #Gaja_Cyclone #Cyclone_Ockhi #ஓக்கி_புயல்_மீனவர்_மரணம் #கஜா_புயல்

ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் -”யார் இந்த பிர்சா முண்டா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*