‘கஜா ‘ பேரிடருக்குப் பின்…!

டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்த இந்துத்துவ அமைப்புகள்?

சபரிமலை பெண்வழிபாடு -தோல்வியில் முடிந்த அனைத்துக்கட்சி கூட்டம்!

டிச -16 கருணாநிதி சிலை திறப்பு- அகில இந்திய தலைவர்கள் வருகை!

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடம்?

நேற்று வீசிய கஜா புயல் தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சிதைத்துள்ளது. விவசாயிகளும், மீனவர்களும் கடும் பொருளாதார அழிவைச் சந்தித்திருக்கிறார்கள்.
புயல் சேதமதிப்புகளை ஆய்வு செய்ய இன்னும் சில வாரங்கள் பிடிக்கும்.காரணம் புயல் உருவாக்கிய சேதங்களை இன்னும் முழுமையாக அகற்றவே சில வாரங்கள் வரை ஆகலாம். வேதாரண்யம் முழுமையாக சீர்குலைந்து தனித்தீவாக உள்ளது. அங்குள்ள பல மக்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. மீட்புக்குழுவினர் பல இடங்களுக்குள் இன்னும் செல்ல முடியவிலை. தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளில் மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று எதிர்க்கட்சி தலைவர் புயல் முன்னேற்பாடுகள் தொடர்பாக அளித்த பாராட்டுப்பத்திரத்தை எடுத்துக் கொண்ட அதிமுக அமைச்சர்கள் ஏதோ கஜா புயலில் சாதித்து விட்டதாக நினைத்துக் கொண்டு வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். சில அணைகள் நிரம்புவதை கருத்தில் கொண்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “அடிக்கடி புயல் வந்தால்தான் குடிநீர் பிரச்சனை தீரும்” என்று பேசியிருக்கிறார்.
இந்த புயல் தமிழகத்தின் பொருளாதாரத்தில் நீண்டகாலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும், காரணம் நன்கு பலன் கொடுத்து வந்த பல லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. வாழை உள்ளிட்ட பணப்பயிர்கள் பல லட்சம் ஏக்கர்களுக்கு நாசமாகி உள்ளன. பல லட்சம் ஆடுகள், பறவைகள், மாடுகள், ஆடுகள், கோழிகள் என இறந்துள்ளன. இவைகள் கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த உயிர்களும், பயிற்களும் சேதமாகி உள்ளன.
பேரிடர் என்பது புயலாகவோ, மழையாகவோ வந்து சென்று விடும் ஆனால், அதன் பாதிப்புகள் பல தலைமுறைகளையும் கடந்து மக்களை பாதிக்கும்!

#ockhi_cyclone #Gaja_Cyclone #Cyclone_Ockhi #ஓக்கி_புயல்_மீனவர்_மரணம் #கஜா_புயல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*