கர்நாடக இடைத்தேர்தல் -பாஜக படு தோல்வி!

மே -1 தொழிலாளர் தின விடுமுறையை ரத்து செய்த பாஜக அரசு!

கர்நாடக மாநிலம் பெல்லாரி, ஷிமோகா, மாணவியா என மூன்று மக்களவை தொகுதிகளுக்கும் ராம்நகர். ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7 துவங்கியது. இதில் ஷிமோகா தொகுதியைத் தவிற மற்ற அனைத்து தொகுதிகளிலும் பாஜக படு தோல்வியைச் சந்தித்துள்ளது.
முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிட்ட ராம்நகர் தொகுதியில் சுமார் முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அனிதா குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார். அது போல மாண்டியா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வென்றுள்ளது. ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அனந்த் சித்து வெற்றி பெற்றுள்ளார். பெல்லாரி தொகுதியிலும் காங்கிரஸ் வென்றுள்ளது. ஷிமோகா தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலை பெறுகிறது.
மொத்தம் தேர்தல் நடந்த ஐந்து தொகுதிகளில் ஷிமோகாவில் மட்டும் பாஜக முன்னிலை பெறுகிறது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் -மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வென்றுள்ளது.

#karnataka_by-elaction #bjp-fail

இலங்கையில் தமிழர் தரப்பு பலமடைந்துள்ளாதா?

#TNPSC தேர்வுகள் வேறு மாநிலத்தவர்களை பணியமர்த்த சதி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*