கேரளாவுக்கு சபரிமலை- கர்நாடகாவுக்கு திப்பு சுல்தான் !

தீபாவளி பட்டாசு – நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு!

அன்றங்கே ஒரு நாடிருந்ததே -பாடல்!

சர்கார் படத்தை முடக்க சதி- விஜய் ரசிகர்கள் மீது தடியடி, வழக்கு!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க மதத்தை அரசியலுலுக்குள் நுழைத்து மக்களை மத வெறிக்கு ஆட்படுத்தும் பிரச்சாரங்கள் வேகம் எடுக்கின்றன. இது தென்னிந்தியாவை சுடுகாடாக்கி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு வருகிறது.

கேரளாவில் சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அந்த தீர்ப்பை நடைமுறைபடுத்தும் கேரள அரசை இந்துக்களுக்கு எதிரிகள் போல சித்தரிக்கிறது பாஜக. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் போராடி வரும் நிலையில், சபரிமலை விவகாரம் கேரளாவில் ஆட்சியைப் பிடிக்க ஒரு நல்ல வாய்ப்பு என்று கேரள பாஜக கருதுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவில் அரசியல் ஆக்கப்பட்டதன் விளைவாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கேரள மாநிலத்தில் பாஜக சபரிமலை அய்யப்பன் கோவிலை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கிறது.
இந்நிலையில்தான் கர்நாடக மாநிலத்தில் ஐக்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில், வெள்ளையரை எதிர்த்து போரிட்டு மடிந்த திப்பு சுல்தான் ஜெயந்தியை அம்மாநில அரசு கொண்டாடுவது மரபு. இந்நிலையில், திப்பு ஜெயந்தியை கொண்டாடுவது இந்துக்களை இழிவு படுத்துகிறது என்று பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் திப்பு ஜெயந்தியை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி வருகின்றன.
வருகிற 10-ஆம் தேதி திப்பு ஜெயந்தி கொண்டாட இருக்கும் நிலையில் பாஜக தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
கர்நாடக அரசு சார்பில் வருகிற 10-ந் தேதி திப்பு ஜெயந்தி விழா நடக்கிறது. இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“திப்பு சுலதான் கொடவா சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொன்று குவித்தவர்.திப்பு சுல்தான் மலைவாழ் மக்களுக்கு எதிரானவர்.எனவே திப்பு ஜெயந்தி கொண்டாடக்கூடாது. திப்பு ஜெயந்திக்கு எதிராக போராடுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் கூறுவது கண்டனத்திற்குரியது.”என்று தெரிவித்துள்ளார்.
திப்பு இந்தியாவின் வெள்ளையரை எதிர்த்த மாபெரும் சுதந்திர போராட்ட வீரர். மன்னர் மட்டுமல்ல பிற்போக்குத்தங்களையும் எதிர்த்தவர். உண்மையான மக்களின் மன்னராக இருந்தவர்.
ஆனால், திப்பு சுல்தான் முஸ்லீம் என்பதால் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதை வைத்தும் அரசியல் செய்கின்றன.

#TipuJayanthi #Yeddyurappa #Tipu_Sultan #Sultan_warrior #pinarayi_vijayan #Kerala_cm_speech #sabarimalatemple #sabarimala #sabarimala_Verdict #SabarimalaTemple #SabarimalaProtests #SabarimalaDebate,

#Man_Animal_Conflict கும்பல் மன நிலை -பெண் புலியை அடித்துக் கொன்ற மக்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*