கோமளவல்லியிடம் சரணடைந்த ‘சர்கார்’ விஜய் -பின்னணி தகவல்கள்!

தெற்கிலிருந்து துவங்கும் தேர்தல் போர்- பெரம்பலூரில் பிரகடனம் செய்த ஸ்டாலின்!
“120 கோடி மக்களை முட்டாளாக்கிய மோடி” – ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டம்!

நாளை ஸ்டாலினை சந்திக்கிறேன் -சந்திரபாபு நாயுடு!

ஜமால் கசோக்கி கொலை -இஸ்ரேல் நிறுவனத்திற்கு தொடர்பு- எட்வர்ட் ஸ்னோடென் தகவல்!

சர்க்கார் படத்தில் ஆளும் அதிமுக அரசை விமர்சிக்கும் காட்சிகளும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறியீடாகக் கொண்டிருக்கும் காட்சிகளை நீக்குகிறோம் என்று சர்கார் படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

சர்கார் படம் தீபாவளி அன்று வெளியானது முதலே ஆளும் அதிமுக தரப்பினர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகளை முன் வைத்து வந்தார்கள். ஊடகங்கள் மூலம் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு கோரிக்கையும் வைத்தனர். ஆனால் இதை சர்கார் படத்தயாரிப்பு நிறுவனமும், இயக்குநர் முருகதாஸ் தரப்பும், நடிகர் விஜய் தரப்பும் கண்டு கொள்ளவில்லை.இந்நிலையில் இன்று தமிழகம் முழுக்க சர்கார் திரைப்படம் திரையிடப்படும் அனைத்து திரையரங்குகள் முன்னாலும் அதிமுக தொண்டர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு சர்கார் பட பேனர்களை கிழித்தெறிந்தனர்.
விஜய் ரசிகர்களால் அவர்களை தடுக்கவும் முடியவில்லை. திரையரங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பல திரையரங்கங்களில் காட்சிகள் ரத்து செய்யப்படும் சூழல் உருவானது. சென்னையில் சர்கார் திரைப்படம் ஓடிய காசி திரையரங்கம் உள்ளிட்ட பல திரையரங்களில் விஜய் படங்கள் கிழிக்கப்பட. திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் படத்தை திரையிட முடியவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கோமளவல்லி என்று படத்தில் இழிவாக காட்டுகிறார்கள். மேலும் படத்தில் நடித்த பழ.கருப்பையா தொடர்ந்து கோமளவல்லி கேரக்டரை இழிவுபடுத்தும் விதமாக பேசுகிறார்.
என்று சொல்ல யோசித்த தயாரிப்பு நிறுவனம் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அறிவித்துள்ளது. சர்கார் என்று பஞ்ச் டயலாக் பேசிய விஜயால் மைனாரிட்டி அரசான எடப்பாடி பழனிசாமி அரசையே தாக்குப் பிடிக்க முடியவில்லை. உண்மையான சர்க்காரை இவர் எப்படி அமைப்பார் என்ற கேள்வி விஜய் ரசிகர்களிடமே உள்ளது.

#sarkar #komalavalli #jayalitha #ஜெயலலிதா #கோமளவல்லி ##SarkarDiwali #SarkarStoryTheft #சர்கார் #இளைய_தளபதி_விஜய் #ialaiya-thalapathy_vijay #sarkar #murugadas_ar # vijay_sarkar,

’சர்கார்’ போஸ்டர் கிழிப்பு -ஒருவர் மரணம் கொலையா தற்கொலையா?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*