சந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் சந்திப்பு முழுமை பெற்றது நாடு தழுவிய கூட்டணி!

#Sarkar_politics இலவச பொருட்களை நொறுக்கும் விஜய் ரசிகர்கள்!

சபரிமலைக்குச் செல்ல நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் மனு!

’சர்கார்’ இயக்குநர் முருகதாஸ் முன் ஜாமீன் மனு!

பாசிச பாஜக அரசை வீழ்த்துவதில் உறுதியாக இருந்து மக்களை அணி திரட்டி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த நாடு தழுவிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்கி வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இது தொடர்பாக பல்வேறு தலைவர்களைச் சந்தித்து வரும் அவர் நேற்று கர்நாடக முதல்வர் தேவகவுடாவைச் சந்தித்தார். இன்று சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இருவரும் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்:-
“மத்தியில் உள்ள மக்கள் விரோத, தேச விரோத, மதச்சார்பற்ற நிலைக்கு விரோதமான மோடி தலமையிலான அரசை வீழ்த்த வேண்டும். என்று ஆந்திர முதல்வர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார். அதனை நான் வரவேற்று அறிக்கை வெளியிட்டேன். மாநிலங்களிம் உரிமைகள் மோடி ஆட்சியில் முழுமையாக பறிக்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த அனைத்து மாநிலங்களில் உள்ள தலைவர்களும் ஒன்று சேர்ந்து பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகிறோம். இம்முயற்சியை முன்னெடுத்துள்ள சந்திரபாபு நாயுடு முன்னெடுத்துள்ளார், என்னை சந்தித்து பேசியுள்ளார். ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளேன். விரைவில் எல்லா மாநில தலைவர்களும் சேர்ந்து ஆலோசனையை மேற்கொண்டு என்ன நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்? என்று முடிவு எடுக்க வேண்டும் என்றார். அக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளேன் என்று கூறினார்.
சந்திரபாபு நாயுடு பேசுகையில், ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் உட்பட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவர்களை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைக்க முயற்சி மேற்கொள்கிறேன். சிபிஐ, ஆர்பிஐ ஆகியவற்றின் பெருமையும் புகழும் குலைக்கப்படுகிறது. சுயாட்சியாக செயல்பட வேண்டிய இந்த அமைப்புகள் இதுபோன்ற நிலையை பார்த்தது கிடையாது. ஆளுநர்களை தங்கள் விருப்பத்துக்கு மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. பண மதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. காங்கிரசுடன் வேறுபாடு இருந்தாலும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினேன். ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் உட்பட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். தனிநபர்களைப் பற்றி பேச இது நேரமல்ல, நாட்டின் நலன், ஜனநாயகமே இப்போது முக்கியம். கூட்டணியை வழிநடத்த பல தலைவர்கள் உள்ளனர், மோடியைவிட மு.க.ஸ்டாலின் கூட சிறந்தவர். எதிர்க்கட்சிகளை இணைக்கும் பணியை வெற்றிகரமாக மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

#Dmk_leader #திமுகதலைவர்_ஸ்டாலின்_நாயுடு #சந்திரபாபு_நாயுடு_ஸ்டாலின்

’சர்கார்’ படத்தை காலி பண்ணிய பழ. கருப்பையா!

கோவளவல்லியிடம் சரணடைந்த ‘சர்கார்’ விஜய் -பின்னணி தகவல்கள்!

தெற்கிலிருந்து துவங்கும் தேர்தல் போர்- பெரம்பலூரில் பிரகடனம் செய்த ஸ்டாலின்!

“120 கோடி மக்களை முட்டாளாக்கிய மோடி” – ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*