சபரிமலைக்குச் செல்ல நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் மனு!

சபரிமலை பெண் வழிபாடு செய்தி தொகுப்பு

’சர்கார்’ இயக்குநர் முருகதாஸ் முன் ஜாமீன் மனு!

’மெர்சல்’ படத்திற்கு கிடைத்த ஆதரவு ‘சர்கார்’ படத்திற்கு இல்லாமல் போனது ஏன்?

’சர்கார்’ படத்தை காலி பண்ணிய பழ. கருப்பையா!

மகரவிளக்கு பூஜைக்காக திறக்க இருக்கும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்த கேரளத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இதை கையாள்வது தொடர்பான நெருக்கடி கேரள அரசுக்கு உருவாகி இருக்கிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்பது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை அமல் படுத்த கேரள அரசு முயன்ற நிலையில் பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பெண்கள் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்து சபரிமலையில் போராட்டங்களை நடத்தினார்கள்.
சபரிமலை விவகாரத்தில் கேரள மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தும் நோக்கில் சபரிமலை தாத்ரிகளும், பாஜகவினரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகி உள்ள நிலையில், சபரிமலையில் பெண் வழிபாட்டிற்கு எதிராக பாஜக ரதயாத்திரையை துவங்கியுள்ளது. அது போல காங்கிரஸ் கட்சியும் ரதயாத்திரையை நடத்துகிறது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன்:-
“சபரிமலையில் பெண் வழிபாட்டிற்கு எதிராக பாஜக, காங்கிரஸ் நடத்தும் ரத யாத்திரைகள் ஒன்றாக மாறுவதைப் பார்க்க காத்திருக்கிறேன். கேரளாவில் காங்கிரஸ் அழிந்து விடும் என்று பாஜக தலைவர் கூறியிருக்கிறார். பாஜக தலைவரின் கூற்றுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பேசவில்லை. இது காங்கிரஸ் அழிவையே காட்டுகிறது.சபரிமலை விவகாரத்தில் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் கருத்து தனிப்பட்ட அவரது கருத்து என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் சபரிமலை விவகாரத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் இணைந்து செயல்படுகிறார்கள்”என்று குற்றம் சுமத்தினார்.
இந்நிலையில், மகர விளக்கு பூஜையில் பங்கேற்று வழிபாடு நடத்த 539 பெண்கள் கேரள காவல்துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் 10 வயதில் இருந்து 50 வயதுக்குள் உள்ள பெண்கள் இவர்கள். இவர்களின் பட்டியலை கவனமாக போலீஸ் ஆய்வு செய்து வருகிறது. விண்ணப்பித்திருக்கும் பெண்கள் உண்மையிலேயே பக்தர்கள் தானா? அல்லது இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பக்தர்கள் என்ற போர்வையில் நுழைந்து சபரிமலை சன்னிதானத்தில் பெரும் பிரச்சனை செய்து கலவரங்களை உருவாக்கலாம் என்று உளவுத்துறை தகவல் கொடுத்திருப்பதால் போலீசார் வழிபாடு நடத்த விண்ணப்பித்திருக்கும் பெண்களின் விபரங்களை கவனமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

#pinarayi_vijayan #Kerala_cm_speech #sabarimalatemple #sabarimala #sabarimala_Verdict #SabarimalaTemple #SabarimalaProtests #SabarimalaDebate,

கோவளவல்லியிடம் சரணடைந்த ‘சர்கார்’ விஜய் -பின்னணி தகவல்கள்!

தெற்கிலிருந்து துவங்கும் தேர்தல் போர்- பெரம்பலூரில் பிரகடனம் செய்த ஸ்டாலின்!

“120 கோடி மக்களை முட்டாளாக்கிய மோடி” – ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*