சபரிமலை -உச்சநீதிமன்ற தீர்ப்பை சாதகமாக்கும் பாஜக!

Sabarimala: Melsanthi Unnikrishnan Nampoothiri opens the Sabarimala temple for the five-day monthly pooja in the Malayalam month of ‘Thulam’, Sabarimala, Wednesday, Oct. 17, 2018. Tension was witnessed outside Sabarimala temple that was opened for the first time for women between the age of 10 and 50 on Wednesday following the Supreme Court verdict, turning over the age-old custom of not admitting them. (PTI Photo) (PTI10_17_2018_000155B) *** Local Caption ***
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜனவரி 22-ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதுவரை அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்த தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறி விட்டது.
கேரளத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்த கட்டுப்பாட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் வழிபாடு நடத்தலாம் என செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 17-ஆம் தேதி வழிபாட்டிற்காக அய்யப்பன் கோவில் நடை திறந்த போது பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்ற போது பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. பெண்களை அனுமதிக்கக் கூடாது என பெரும் போராட்டங்களையும் பாஜக உள்ளிட்ட அமைப்புகள் நடத்தின. இதுவரை ஒரு பெண் கூட அய்யப்பனை தரிசிக்க முடியாத நிலையில், இதை வைத்து கேரள அரசியலில் கால் பதிக்கும் முயற்சியில் பாஜக உள்ளது.
இந்நிலையில், அய்யப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசையிட்டி உள்ளிட்ட 48 அமைப்புகள் பெண்கள் வழிபாட்டை அனுமதிக்கக் கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடின.இந்த வழக்கு இன்று, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா அமர்வு முன்பு மறுஆய்வு மனுக்கள் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தன.
“பெண் வழிபாட்டிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு ஜனவரி 22- முதல் மீண்டும் விசாரிக்கும்.அதுவரை தற்போதைய நிலையே தொடரும்.அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம்”என்று இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்துதான் பாஜக கேரள அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தாத்ரிகளுடன் சேர்ந்து பாஜகவினர் கேரள அரசை வீழ்த்த சதி செய்து வருகிறார்கள்.உச்சநீதிமன்றத்தில் உருவாகும் தாமதங்கள் கேரள அரசியலில் பெரும் பதட்டத்தை உருவாக்கி வருகிறது.
#pinarayi_vijayan #Kerala_cm_speech #sabarimalatemple #sabarimala #sabarimala_Verdict #SabarimalaTemple #SabarimalaProtests #SabarimalaDebate,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*