சபரிமலை கோவிலை பூட்டி கலவரம் மூட்ட பாஜக -தாத்ரிகள் கூட்டு சதி?

Sabarimala: Melsanthi Unnikrishnan Nampoothiri opens the Sabarimala temple for the five-day monthly pooja in the Malayalam month of ‘Thulam’, Sabarimala, Wednesday, Oct. 17, 2018. Tension was witnessed outside Sabarimala temple that was opened for the first time for women between the age of 10 and 50 on Wednesday following the Supreme Court verdict, turning over the age-old custom of not admitting them. (PTI Photo) (PTI10_17_2018_000155B) *** Local Caption ***

സംഘികളെ തേച്ചൊട്ടിച്ച് മാതൃഭൂമിയിലെ വേണു… ''വിശ്വാസികളെ, സംഘപരിവാർ വഞ്ചിക്കുന്നതിന് ഇതിലും വലിയ തെളിവ് വേണോ''….? ''നമ്മുടെ നാട് ഒരു വലിയ ആപത്തിനെ നേരിടുകയാണ് ''

Posted by Pinarayi Vijayan for Kerala on Monday, November 5, 2018

#Man_Animal_Conflict கும்பல் மன நிலை -பெண் புலியை அடித்துக் கொன்ற மக்கள்!

#olivu_divasathe_kali ‘ஒழிவுதிவசத்தே களி’ நம் இயல்பின் மீதொரு இடி!

மே -1 தொழிலாளர் தின விடுமுறையை ரத்து செய்த பாஜக அரசு!

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் அய்யப்பன் கோவில் நடையைச் சாத்தி பக்தர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி ஆதாயம் அடைய பாஜக – தாத்ரிகளும் சதி செய்துள்ளது அம்பலமாகி உள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் கோவில் நடையை சாத்தி விடுவதாக தாத்ரிகள் பேசியது என்னிடம் பேசிவிட்டுத்தான் அறிவித்தார் என கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பேசியுள்ளார்.
சபரிமலை கோவிலுக்குள் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை அமல் படுத்த கேரள அரசுக்கு பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இடைஞ்சலாக இருந்து வருவதோடு பெண்கள் வழிபாடு நடத்த தடையாகவும் இருந்து வருகிறது. மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜகவின் பிரதமர் கேரள மாநிலத்தில் தங்கள் கட்சியினரின் இந்த நடவடிக்கை தொடர்பாக அமைதியாக இருக்கிறார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கேரளம் வந்து பாஜகவினரின் நடவடிக்கைகளை உற்சாகப்படுத்துகிறார்.
பெண்கள் கோவிலுக்குள் வருவது தொடர்பாக தாத்ரிகள் பெண்கள் கோவிலுக்குள் வந்தால் நடையைப் பூட்டி விட்டுச் சென்று விடுவோம் என்றார். மேலும் , சபரிமலை அய்யப்பன் சந்நிதானத்தில் சிறுநீர் கழிக்கவும் திட்டமிட்டிருந்தோம் என்பது போன்ற தாத்ரிகளின் திட்டங்கள் தெரியவர கேரள முதல்வர் பினராயி விஜயன் “கோவில் ஒன்றும் தாத்ரிகளின் சொத்து அல்ல. அது பொதுமக்களின் சொத்து. அய்யப்பனுக்கு பூஜை செய்கிறவர்கள் பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும் என்ற ஐதீகம்” உள்ளது என்று எச்சரிக்கை விடுத்த பின்னர் அடங்கினார்கள்.
இந்நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கட்சி நிர்வாகிகளுடன் பேசும் போது “கடந்த அக்டோபர் மாதம் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் கோவில் நடையை அடைக்கப்போவதாக தாத்ரி கண்டரரு ராஜீவரு அறிவித்தார். அவ்வாறு அவர் அறிவிக்கும் முன்னர் என்னிடம் பேசி விட்டுத்தான் அறிவித்தார்.அவ்வாறு அறிவித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகுமா என்று என்னிடம் கேட்டார்.அதற்கு நான் ‘‘அவ்வாறு அறிவிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. அது நீதிமன்ற அவமதிப்பு என்றால் அது எனக்கும் பொருந்தும், பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் பொருந்தும். எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். பாஜக உங்கள் பின்னால் இருக்கிறது’’ எனக் கூறினேன். அதன் பின்னரே அவர் தைரியமாக அதை அறிவித்தார். சபரிமலை கோவில் பிரச்சனை நமக்கு பொன் முட்டையிடும் வாத்து போன்றது இதை அரசியல் ரீதியாக பயன்படித்திக் கொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார். இந்த விடியோ வெளியாகி உள்ளது.
மொத்தத்தில் பக்தியை விட கேரளத்தில் மார்க்சிஸ்ட் அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடிக்கும் நோக்கமே பாஜகவினரிடம் உள்ளது. அதற்கு கூட்டாளிகளாக தாத்ரிகள் செயல்பட்டிருப்பது பல்வேறு தரப்பினரிடமும் கடும் கண்டனங்களை உருவாக்கி இருக்கிறது.

#pinarayi_vijayan #Kerala_cm_speech #sabarimalatemple #sabarimala #sabarimala_Verdict #SabarimalaTemple #SabarimalaProtests #SabarimalaDebate,

இலங்கையில் தமிழர் தரப்பு பலமடைந்துள்ளாதா?

#TNPSC தேர்வுகள் வேறு மாநிலத்தவர்களை பணியமர்த்த சதி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*