சபரிமலை கோவில் புனிதம் கெடுத்த ஆர்.எஸ்.எஸ் -தாத்ரிகள் -நீதிமன்றத்தில் வழக்கு!

#sarkar “நல்ல கதையா திருடுங்கடா” சர்காரை சீண்டும் எச்.ராஜா?

’சர்கார் நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

தீபாவளி -330 கோடிக்கு மது விற்பனையில் சாதனை!

இரு முடி கட்டாமல் சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18 படிகள் ஏறிய ஆர்.எஸ்.எஸ் பிமுகர் தேவசம் போர்ட் உறுப்பினர்களுக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் புனிதமாகக் கருதப்பட்டுவரும் 18 படிகளை, ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவரும், தேவசம் போர்டு உறுப்பினரும் தலையில் இருமுடி இல்லாமல் ஏறிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

இதையடுத்து, சபரிமலையில் கட்டுப்பாடுகளையும், பாரம்பரியத்தையும் மீறிச் செயல்பட்ட தேவசம்போர்டு வாரிய உறுப்பினர் கே.பி.சங்கர்தாஸை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாரம்பரிய நடைமுறை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மிகவும் புனிதமாக மதிக்கப்படும் 18 படிகளில் ஏறுவதற்கு ஒரு மண்டலம் விரதம் இருந்து, இருமுடிகட்டி ஏற வேண்டும் என்பது பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருமுடி கட்டாமல் வரும் பக்தர்களுக்கு 18 படிகளில் ஏற அனுமதியில்லை. அவர்கள் பின்வாசல் வழியாக வர வேண்டும்.

அதேசமயம், கோயிலின் தந்திரிகள், பந்தளம் அரச குடும்பத்தினர் மட்டும் தலையில் இருமுடியின்றி18 படிகள் மீது ஏறி வரலாம் என்ற பாரம்பரியம் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இருமுடி இல்லாமல்

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. திங்கள்கிழமை கோயிலுக்குச் சென்ற கேரள ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கியப் பிரமுகரான வல்சன் திலன்கரி, கோயிலின் தந்திரிகளோடும், தேவசம்போர்டு உறுப்பினர் சங்கரதாஸ் ஆகியோருடனும் 18 படிகளில் ஏறினார்.

அதுமட்டுமல்லாமல் கோயிலில் பக்தர்கள் முன்னிலையில் ஒலிப்பெருக்கி மூலம் பேசிய வல்சன் திலன்கரி, கோயிலுக்குள் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வராமல் தடுப்போம், கோயில் பாரம்பரியத்தைக் காப்போம் என்று பேசினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பரவியது.

இந்த விஷயம் வெளியாகி சர்ச்சையான பின் நிருபர்களிடம் பேசிய தேவசம்போர்டு உறுப்பினர் கே.பி.சங்கரதாஸ், சபரிமலை பாரம்பரியத்தை மீறுபவர்கள் யாரானாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் எந்தவிதமான விதிமுறை மீறலிலும் ஈடபடவில்லை எனத் தெரிவித்தார்.

முதல்வர் கண்டனம்

இதுகுறித்து அறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயனும், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாரம்பரியத்தை மதிக்காமல் சென்ற வல்சனை கடுமையாகச் சாடினார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், சபரிமலை கோயிலுக்குச் செல்லும் அரசியல் தலைவர்கள் கோயிலின் பாரம்பரியத்தை, மரபுகளையும் பின்பற்றி நடக்க வேண்டும். ஆனால், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கோயிலின் புனிதத்தன்மையைப் பாதுகாக்க ஆர்வம் காட்டவில்லை.

நான் கோயிலுக்குச் செல்லாதவன்தான். இருந்தாலும், சபரிமலைக்குச் சமீபத்தில் சென்றபோது, கோயிலின் பாரம்பரியப்படி, 18 படிகள் மீது நான் வரவில்லை. மாறாக, பின்புறம் வழியாகவே நான் சென்றேன் எனத் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் மனு

பிரயர் கோபால கிருஷ்ணன்

இந்நிலையில், கோயிலின் பாரம்பரியத்தைக் காக்கத் தவறிய தேவசம்போர்டு வாரிய உறுப்பினர் கே.பி.சங்கரதாஸை நீக்கக் கோரி, திருவிதாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர் பிரயார் கோபால கிருஷ்ணன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இந்து மதத்தின் பாரம்பரியத்தைக் காப்பேன், கோயிலின் விதிமுறைகளை மதிப்பேன் என்று தேவசம்போர்டு உறுப்பினர் சங்கரதாஸ் உறுதிமொழி எடுத்தார். ஆனால், மிக எளிதாக ஆர்எஸ்எஸ் தலைவரை 18 படிகளில் ஏறி வர அனுமதித்துள்ளார். 18 படிகளில் ஏறிச் செல்வதற்கு இருமுடிகட்டிவரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. அவ்வாறு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனால், 18 படிகளை சங்கரதாஸ் ஏறி, கோயிலின் பாரம்பரியத்தை மதிக்கத் தவறிவிட்டார். ஆதலால், விதிமுறைகளை மீறிய சங்கரதாஸை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரயார் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*