’சர்கார்’ இயக்குநர் முருகதாஸ் முன் ஜாமீன் மனு!

’மெர்சல்’ படத்திற்கு கிடைத்த ஆதரவு ‘சர்கார்’ படத்திற்கு இல்லாமல் போனது ஏன்?

’சர்கார்’ படத்தை காலி பண்ணிய பழ. கருப்பையா!

கோவளவல்லியிடம் சரணடைந்த ‘சர்கார்’ விஜய் -பின்னணி தகவல்கள்!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள ‘சர்கார்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தீபாவளி அன்று நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ படம் வெளியானது. தமிழக அரசின் இலவச திட்டங்களை மிகக்கடுமையாக அந்த படம் விமர்சிப்பதோடு, கோமளவல்லி என்ற காதாப்பாத்திரம் ஜெயலலிதாவை இழிவு படுத்துவதாகவும் அதிமுகவினர் கருதியதால், ஆளும் கட்சி அமைச்சர்கள் சர்கார் படத்திற்கு எச்சரிக்கை விடுத்ததோடு திரையரங்க வாசல்களில் இருந்த விஜய் பட போஸ்டர்களையும் கிழித்தெறிந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு காவல்துறையினர் இயக்குநர் முருகதாசை விசாரணைக்கு அழைப்பதற்காக வீட்டிற்குச் சென்றதாகவும், அவர் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், இன்று முன் ஜாமீன் கோரி முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்  செய்துள்ளார்.

அவரது மனுவை இன்று பிற்பகல் உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.

#sarkar #komalavalli #jayalitha #ஜெயலலிதா #கோமளவல்லி##SarkarDiwali #SarkarStoryTheft #சர்கார்#இளைய_தளபதி_விஜய் #ialaiya_thalapathy_vijay #sarkar #murugadas_ar
#vijay_sarkar

 

 

தெற்கிலிருந்து துவங்கும் தேர்தல் போர்- பெரம்பலூரில் பிரகடனம் செய்த ஸ்டாலின்!
“120 கோடி மக்களை முட்டாளாக்கிய மோடி” – ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*