’சர்கார்’ நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

தீபாவளி -330 கோடிக்கு மது விற்பனையில் சாதனை!

கேரளாவுக்கு சபரிமலை- கர்நாடகாவுக்கு திப்பு சுல்தான் வேகமாக வெறியெடுக்கும் மத அரசியல்!

தீபாவளி பட்டாசு – நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு!

அன்றங்கே ஒரு நாடிருந்ததே -பாடல்!

தீபாவளி அன்று நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான வசனங்களும் காட்சிகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
படம் வெளியான நேற்றே திரையரங்களில் கூடிய விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. குடியாத்தத்தில் ஊர்வலமாகச் சென்ற ரசிகர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க விஜய் ரசிகர்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்பட்ட நிலையில், தமிழக அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசும் போது “சர்கார் படத்தில் தமிழக அரசுக்கு எதிராக இருக்கும் காட்சிகள் தொடர்பான தகவல்கள் எங்களுக்கு வந்துள்ளது. அதை தமிழக முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். வளர்ந்து வரும் நடிகரான விஜய்க்கு இந்து நல்லது கிடையாது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லை என்றால் நடவடிக்கை எடுப்போம்” என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
படக்குழு இது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில் “யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை” என்று மட்டும் விளக்கம் கொடுத்துள்ள நிலையில், சர்கார் படக்குழுவுக்கும் நடிகர் விஜய்க்கும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#சர்கார் #இளையதளபதி_விஜய் #sarkar #ilaiyathalapathy_vijay #murugadas

சர்கார் படத்தை முடக்க சதி- விஜய் ரசிகர்கள் மீது தடியடி, வழக்கு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*