’சர்கார்’ படத்தை காலி பண்ணிய பழ. கருப்பையா!

கோவளவல்லியிடம் சரணடைந்த ‘சர்கார்’ விஜய் -பின்னணி தகவல்கள்!

தெற்கிலிருந்து துவங்கும் தேர்தல் போர்- பெரம்பலூரில் பிரகடனம் செய்த ஸ்டாலின்!
“120 கோடி மக்களை முட்டாளாக்கிய மோடி” – ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டம்!

சர்கார் படத்தில் அரசியல்வாதி வேடத்த்தில் நடித்துள்ள பழ.கருப்பையா ஆளும் அதிமுக அரசை விமர்சித்து பேசுவது சர்கார் படத்திற்கு மேலும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது. முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழ.கருப்பையா தன் பதவியை ராஜிநாமா செய்து விட்டு சில காலம் திமுக அனுதாபியாக இருந்தார். பின்னர் அமைதியாகி விட்டார். இப்போது சர்கார் படத்தில் நடித்திருக்கும் பழ.கருப்பையா தொலைக்காட்சி பேட்டிகள் மூலம் ஆளும் கட்சியை விளாசுகிறார்.

சர்கார் படத்திற்கும் ஆளும் அதிமுக அரசுக்கும் இடையில் உருவாகியிருக்கும் மோதலில் தயாரிப்பாளர் தரப்போ, விஜய் தரப்போ, இயக்குநர் முருகதாஸ் தரப்போ அமைதியாக இருக்கும் நிலையில். அந்த படத்தில் நடித்திருக்கும் பழ.கருப்பையா சர்காருக்காக வரிந்து கட்டி அதிமுகவை விளாசுகிறார். நடிகர் விஜய்க்கு அரசியல் விருப்பம் உள்ளதாகவும், இங்குள்ள அரசியல் சூழல் சரியில்லாத காரணத்தால் அவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது அரசியலுக்கு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரது இந்த உரையாடல்கள் ஆளும் கட்சியினரை மேலும் உசுப்பேற்றுவதாக உள்ளது. அரசின் இலவச திட்டங்கள் தொடர்பான காட்சிகளையும், கோமளவல்லி என்ற கேரக்டரில் வரும் சில காட்சிகளையும் அந்த பெயரையும் நீக்குவதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் பழ.கருப்பையாவின் பேச்சுகள் சர்கார் படத்திற்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

#sarkar #komalavalli #jayalitha #ஜெயலலிதா #கோமளவல்லி ##SarkarDiwali #SarkarStoryTheft #சர்கார் #இளைய_தளபதி_விஜய் #ialaiya-thalapathy_vijay #sarkar #murugadas_ar # vijay_sarkar

நாளை ஸ்டாலினை சந்திக்கிறேன் -சந்திரபாபு நாயுடு!

ஜமால் கசோக்கி கொலை -இஸ்ரேல் நிறுவனத்திற்கு தொடர்பு- எட்வர்ட் ஸ்னோடென் தகவல்!

’சர்கார்’ போஸ்டர் கிழிப்பு -ஒருவர் மரணம் கொலையா தற்கொலையா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*