’சர்கார்’ போஸ்டர் கிழிப்பு -ஒருவர் மரணம் கொலையா தற்கொலையா?

#sarkar “நல்ல கதையா திருடுங்கடா” சர்காரை சீண்டும் எச்.ராஜா?

’சர்கார் நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

தீபாவளி -330 கோடிக்கு மது விற்பனையில் சாதனை!

வேலூர் மாவட்டத்தில் சர்கார் பட போஸ்டர் கிழிப்பு தொடர்பாக எழுந்த மோதலை அடுத்து போஸ்டரை கிழித்தவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அது கொலையாக இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தீபாவளியை முன்னிட்டு சர்கார் படம் ரிலீஸ் ஆனது. விஜய் ரசிகர்கள் படத்திற்கான போஸ்டரை பல்வேறு இடங்களில் வைத்தனர். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்திலும் மணிகண்டன் என்பவர் வீட்டின் அருகில் சர்கார் போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், மணிகண்டன் போஸ்டரை கிழித்ததாக கூறப்படுகிறது. போஸ்டரை கிழித்த மணிகண்டனை விஜய் ரசிகர்கள் சேர்ந்து தாக்கினார்கள். மேலும் மேலும் விஜய ரசிகர்கள் திரண்ட நிலையில் மணிகண்டனை அவரது உறவினர்கள் மீட்டு ஒரு அறைக்குள் அடைத்தனர்.
விஜய் ரசிகர்கள் கலைந்து சென்ற பிறகு அறையை திறந்த போது மணிகண்டன் அறைக்குள் தூக்கு மாட்டி இறந்திருந்தார். விஜய் ரசிகர்கள் அந்த வீட்டைச் சுற்றி பல நேரம் கலாட்டா செய்தனர். பல மணி நேரம் கழித்துதான் மணிகண்டன் இறந்திருப்பது கண்டு பிடிக்கபப்ட்டது. இப்போது மணிகண்டனை தாக்கிய விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதியப்படுள்ளது. மேலும் மணிகண்டன் கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

#சர்கார் #இளைய_தளபதி_விஜய் #ialaiya-thalapathy_vijay #sarkar #murugadas_ar

கேரளாவுக்கு சபரிமலை- கர்நாடகாவுக்கு திப்பு சுல்தான் வேகமாக வெறியெடுக்கும் மத அரசியல்!

தீபாவளி பட்டாசு – நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு!

அன்றங்கே ஒரு நாடிருந்ததே -பாடல்!

சர்கார் படத்தை முடக்க சதி- விஜய் ரசிகர்கள் மீது தடியடி, வழக்கு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*