சர்கார் படத்தை முடக்க சதி- விஜய் ரசிகர்கள் மீது தடியடி, வழக்கு!

இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்க்கார்’ படம் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது. ஆளும் அதிமுக அரசுக்கும் , பாஜகவுக்கும் எதிரான காட்டமான வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கும் நிலையில்,

தமிழகம் முழுக்க ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பினர் இந்த படத்தை முடக்க சதி செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் படம் வெளியீடு என்றால் ரசிகர்கள் கட் அவுட் உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்களை நடத்துவார்கள். அப்படி கொண்டாடிய ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. குடியாத்தத்தில் விஜய் பட ரிலீசை ஒட்டி ஊர்வலமாகச் சென்ற ரசிகர்கள் 50 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இது போல தமிழகம் முழுக்க விஜய் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்குகள் பதியப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சர்க்கார் படம் இபிஎஸ்- ஒபிஎஸ் குழுவினரை ரொம்பவே டென்ஷன் ஆக்கியிருக்கிறதாம்.

#சர்கார் #இளைய_தளபதி_விஜய் #ialaiya-thalapathy_vijay #sarkar #murugadas_ar # vijay_sarkar

மே -1 தொழிலாளர் தின விடுமுறையை ரத்து செய்த பாஜக அரசு!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*