சி.பி.ஐ ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல- நீதிபதி செலமேஸ்வர்!

இந்திய நீதிபதிகளில் செலமேஸ்வர் ஜனநாயகத்திற்காகவும், உண்மைக்காகவும் போராடியவர். நீதிபதி தீபக் மிஸ்ரா மீது ஊடகங்களை அழைத்து விமர்சனத்தை வெளிப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் நீதிபதி செலமேஸ்வர்.அவர் மும்பை பாந்த்ராவில் ‘ஜனநாயகத்தில் மறுப்பிற்கான இடம்’ என்ற தலைப்பில் உரையாற்றிய நீதிபதி செலமேஸ்வர் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் வெளிப்படையாக விவாதித்து உள்ளார்.
“என்னை நல்ல நீதிபதியாக நினைவில் கொள்ள வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். மோசமான இந்திய தலைமை நீதியாக அல்ல” என்றார். உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் ஒதுக்கப்படுவதில் காட்டப்படும் பாரபட்சம் தொடர்பாக நடத்திய செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக பேசிய நீதிபதி செலமேஸ்வர்:-
“ சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற சிலர் என்னிடம் “நீங்கள் இப்போதாவது இதனைச் செய்தாக வேண்டும் என்று கேட்டனர். ஒரு வழக்கை இந்த பெஞ்ச்தான் விசாரிக்க வேண்டும் என்று வழக்கு ஒதுக்கப்பட்ட பின்னர். அதே வழக்கு இன்னொரு பெஞ்சுக்கு ஒரே இரவில் மாற்றப்பட்டது தொடர்பாக குழப்பம் நிலவியது. வழக்குகளை ஒதுக்குவதில் கடைபிடிக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை பற்றித்தான் அந்தச் சந்திப்பில் பேசினோம்”என்றார்.
“நான் சட்டம் படிக்கும் காலத்திலேயே நீதிபதிகள் நியமனத்தில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்று கூறியவன். அரசு கூறட்டும் ஆனால், நீதிபதிகள் நியமனத்தில் அவர்கள் உச்சநீதிமன்றத்தை கட்டுப்படுத்தக் கூடாது. தீர்ப்புகளை அமல் படுத்த அரசுகள் தேவை. ஆனால், அரசுகள் டிஹைச் செய்யவில்லை. அரசுகள் தீர்ப்புகளை செயல்படுத்தாத போது நீதிபதிகள் அதில் செய்வதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.
சிபிஐ மீது உருவாகியிருக்கும் விமர்சனங்கள் தொடர்பாக பேசிய அவர் “பொதுவாகவே சிபிஐ தான் சில முக்கிய விவகாரங்களை விசாரிக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், சிபிஐ ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல. அதில் முறையான சட்ட விதிமுறைகள் இல்லை. அரசியல் கட்சிகள்தான் இதற்கு முழு பொறுப்பு. நமது நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே சிபிஐ -அமைப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. பிரச்சனைகள் எழுவதற்குக் காரணம் நாம் தெசப்பிதாவை மறந்து விட்டோம். நாம் உண்மைகளைப் பேச மறந்து விட்டோம். உண்மைதான் முதல் தியாகம்.அதனை அனைவரும் ஏமாற்ற முயல்கிறார்கள்” என்றார்.

#Deepak_Misra #நீதிபதி_செலமேஸ்வர் #உச்சநீதிமன்றம் #Tamilagam #Chelameswar #Jasti_Chelameswar

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*