ஜமால் கசோக்கி கொலை -இஸ்ரேல் நிறுவனத்திற்கு தொடர்பு- எட்வர்ட் ஸ்னோடென் தகவல்!

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கி இஸ்தான்புல் தூதரத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மாஸ்கோவில் தஞ்சமடைந்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த எட்வர்ட் ஸ்னோடென் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
சவுதி மன்னரின் முடியாட்சியை  தொடர்ந்து விமர்சித்து வந்த  சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59) இவர் கடந்த 2-ஆம் தேதி தன் திருமணம் தொடர்பான ஆவணங்கள் சிலதை பெறுவதற்காக துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குச் சென்றார். அப்போது மாயமான அவரை சவுதி அரேபியாவைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள் கொலை செய்தது உறுதி ஆனது.
முதலில் இதை சவுதி அரசு மறுத்தாலும் பின்னர் அதை ஒத்துக் கொண்டது. இந்த விவகாரத்தில்  அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகக்கடுமையான எச்சரிக்கைகளை சவுதி அரசுக்கு  விடுத்தார்.  ஜமால் கசோக்கியின் காதலியை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பும்  விடுத்தார். ஆனால், “அமெரிக்க அதிபர் ஜமால் கசோக்கி கொலையில் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. விளம்பரத்திற்காக என்னை அமெரிக்கா அழைக்கிறார்”என்று டிரம்பின் அழைப்பை ஜமால் கசோக்கியின்  காதலி நிராகரித்தார்.
இந்நிலையில் தான் ஜமால் கசோக்கி கொலையில் இஸ்ரேலிய நிறுவனத்திற்கு இருக்கும் தொடர்பை எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்டுள்ளார். அமெரிக்க ரக்சியங்களை வெளிப்படுத்தியமைக்காக  அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளியான எட்வர்ட் ஸ்னோடென்  ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளார். அவர் கடந்த செவ்வாய்கிழமை அன்று டெல் அவீவில் நடந்த மாநாடு ஒன்றில் விடியோ கான்பிரசிங் மூலம் பேசினார். அவர் பேசும் போது:-
“உலகமெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் டிஜிட்டல் கருவியை என்.எஸ். ஓ விற்பனை செய்ததுள்ளது. சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி இஸ்ரேலிய ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கனடா ஆராய்ச்சி நிறுவனமான சிட்டிசன் ஆய்வகத்தால் தகவல் வெளியிடப்பட்டது.
என்.எஸ்.ஓ பெகாசஸ் ஸ்பைவேர் ஜமால் கசோக்கியின் நண்பரும் சவுதி அரேபியருமான ஓமர் அப்துலாசின் மொபைல் போனில் பொறுத்தப்பட்டது.ஸ்னோடென் வெளியிட்டுள்ள இந்த தகவல் பல அதிர்ச்சிகளை உருவாக்கி உள்ளது. ஜமால் கசோக்கியின் கொலையில் சவுதி அரேபிய அரசையும் கடந்து பல நாடுகளின் கைகள் இதில் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
#ஊடகசுதந்திரம் #பத்திரிகையாளர்_கொலை #ஜமால்_கசோகி #சவுதிஅரேபியா
#sarkar “நல்ல கதையா திருடுங்கடா” சர்காரை சீண்டும் எச்.ராஜா?

’சர்கார் நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

தீபாவளி -330 கோடிக்கு மது விற்பனையில் சாதனை!

கேரளாவுக்கு சபரிமலை- கர்நாடகாவுக்கு திப்பு சுல்தான் வேகமாக வெறியெடுக்கும் மத அரசியல்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*