டிச -16 கருணாநிதி சிலை திறப்பு- அகில இந்திய தலைவர்கள் வருகை!

பழ.நெடுமாறனின் நூலை அழித்து விடுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம்!

ராஜபக்சே தோல்வி -வென்றார் ரணில்!

திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் சிலை டிசம்பர் 16-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.

முன்னாள் முதல்வரான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதுமை காரணமாக மரணமடைந்தார். அவரது உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு அனுமதி மறுத்தது. திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கருணாநிதி உடலை மெரீனாவில் அடக்கம் செய்ய அனுமதி பெற்றது.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் அண்ணாவின் சிலை அருகில், கருணாநிதிக்கும் சிலை அமைக்க திமுக தலைமைக்கழகம் முடிவு செய்தது. அதையொட்டி சிலை உருவாக்கும் பணியை முடுக்கி விட்ட திமுக, அறிவாலயத்தினுள் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணிகளை துரிதமாக்கி உள்ளது.

டிசம்பர் 16-ஆம் தேதி  கருணாநிதியின் சிலை திறந்து வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர், அனைத்து மாநில முதல்வர்கள், உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், சித்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

#கருணாநிதி #Dmk_Leader_Karunanidhi_statue #Anna_Aeivalayam #அண்ணா_அறிவாலயம்

அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு தனி தலைமைச் செயலகம் -சுயாட்சிக்கு ஆபத்து!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*