டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்த இந்துத்துவ அமைப்புகள்?

Carnatic music vocalist T.M. Krishna Performing at the Panguni Music and Dance Festival at the Kapaleeswarar Temple in Chennai on Saturday. EXPRESS/A.RAJA CHIDAMBARAM.

#TM_Krishna

சபரிமலை பெண்வழிபாடு -தோல்வியில் முடிந்த அனைத்துக்கட்சி கூட்டம்!

டிச -16 கருணாநிதி சிலை திறப்பு- அகில இந்திய தலைவர்கள் வருகை!

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடம்?

ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் -”யார் இந்த பிர்சா முண்டா?

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் டெல்லி பூங்காவில் இசை நிகழ்ச்சி நடத்த இருந்த நிலையில், இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக அந்த இசை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோமன் மகசேசே விருதை இசைக்காக வென்ற தமிழக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா 2014-ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற போதே அதை கடுமையாக விமர்சித்தவர். வலசாரி கருத்துக்களை தீவிரமாக எதிர்த்து இசையை அனைத்து மக்களுக்குமானது என சேரிகளில் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கர்நாடக இசையில் வேறு மதப்பாடல்களை பாடக்கூடாது என பல்வேறு பாடகர்களுக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், கர்நாடக இசையில் கிறிஸ்தவ பாடல்களைப் பாடி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக டி.எம்.கிருஷ்ணா அறிவித்தார். இதற்கு, பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், நாளை 17 -ம் தேதியும், நாளை மறு நாள் 18-ஆம் தேதியும் டெல்லி பூங்காவில் இந்த இசை நிகழ்ச்சியை இந்திய விமானநிலைய ஆணையமும் ஸ்பிக்-மெகாய் எனும் கலாச்சார அமைப்பும் இணைந்து ஒருங்கிணைத்த நிலையில், நிகழ்ச்சியை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசையில் கிறிஸ்தவ பாடல்களை பாட இருக்கிறார். என்றும், அவர் இந்துக்களுக்கு துரோகம் இழைக்கிறார் என்றும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தின் விளைவாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தவிற இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி இந்திய விமான ஆணையத்திற்கு ஆளும் பாஜக அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பி.பி.சி தமிழிடம் பேசிய டி.எம்.கிருஷ்ணா
” நவம்பர் 12 அன்று இந்திய விமான நிலைய ஆணையம் (Airport Authority of India) இந்த இசை நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் அறிவித்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அப்போது முதலே ட்விட்டரில் என் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது. இவர் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பாடல்களை பாடுபவர், இவரை வைத்து ஏன் இசை நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்,” என்றார் அவர்.
“என்னை ஏண்டி-இந்தியன், ஏண்டி-நேஷனல், ஏண்டி-இந்து, அர்பன் நக்சலைட் ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்தனர். 13ஆம் தேதி இரவு வரை இசை நிகழ்ச்சி நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இருந்தேன். ஆனால், அவசரமான சில காரணங்களுக்காக நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக, இந்திய விமான நிலைய ஆணையத்தினரால் அன்று இரவு எனக்குத் தெரிவிக்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார் டி.எம்.கிருஷ்ணா

#Tm_krishna #Karnatic_Music #krishna_singer

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*