தருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல்?

#Gaja_cyclone பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் எடப்பாடி எஸ்கேப் ஆவது ஏன்?

முதல் தீட்டு- தோப்புக்குள் பலி கொள்ளப்பட்ட சிறுமி!

‘கஜா ‘ பேரிடருக்குப் பின்…!

தருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகளான மூவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான போது 2000- ம் ஆண்டில் தமிழகம் முழுக்க அதிமுகவினர் பெரும் வன்முறையில் அப்போது தருமபுரியில் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் சுற்றுலா சென்ற பேருந்துக்கு அதிமுகவினர் தீவைத்தனர். அதில் மூன்று மாணவிகள் பேருந்தில் எரிந்து சாம்பலாகினர். இந்த வழக்கில் நெடுஞ்செழியன், மாது,முனியப்பன்,ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனை ஆனது.
இந்நிலையில். ஆயுள் கைதிகளாக சிறையில் இருக்கும் இவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துறைத்த நிலையில், ஆளுநர் ,மாளிகை அதை நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், ஆளுநர் மூவர் விடுதலைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையொட்டி மூவரும் வேலூர் சிறையில் இருந்து விடுதலையாகி வீடுகளுக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

#dharmapuri_fire #தருமபுரி_பேருந்து_எரிப்பு_குற்றவாளிகள் #கோகிலவாணி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*