திமுகவை விரும்பும் காங் -தேசிய அளவில் முக்கியத்தும பெறும் திமுக!

திமுக கூட்டணியின் காங்கிரஸ் தேசிய தலைமை உறுதியாக உள்ளது!
திமுக பங்கேற்காத எந்த கூட்டணியிலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.
இந்திய அளவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தெற்கு மாநிலங்கள் நோக்கியே அனைத்து கட்சிகளும் குறிவைக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக மீது தேசியக் கட்சிகளின் பார்வை திரும்பியுள்ளது. பாஜகவும் திமுக தங்கள் பக்கம் வரவேண்டும் என மறைமுகமாக விரும்புகிறது. முன்னாள் முதல்வரான கருணாநிதி மறைவுக்கு பாஜகவின் தேசிய தலைமை அதிக முக்கியத்துவம் கொடுத்ததோடு தேசிய துக்கமும் அறிவித்தது. பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநில சட்டமன்றத்தில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது போல மும்பையில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மாநாட்டிலும் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்னொரு பக்கம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் தலைவர் சித்தாராம் யெச்சூரி போன்றோரும் ஸ்டாலினைச் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பேசி வருகிறார்கள். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொருப்பாளர் சஞ்சய் தத் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
ஆனால், அதற்கு சில தினங்கள் முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து பேசினார். கமல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு முயல்கிறார் என்ற செய்திகள் வெளியானது. அதை காங்கிரஸ் கட்சியும் மறுக்கவில்லை. என்ற நிலையில், தான் அடுத்தடுத்து நடந்த சந்திப்புகள் தேசிய அளவில் முக்கியத்துவம் உள்ளதாக மாறிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் “ திராவிடக் கட்சியான திமுக மதச்சார்பற்ற தன்மையை பேணுவதிலும், பாஜகவை வீழ்த்துவதிலும் உறுதியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் நீண்டகால நம்பிக்கைக்குரிய கூட்டாளி திமுக. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக பங்கேற்காத எந்த கட்சிகளுடனும், கூட்டணிகளுடனும் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொள்ளாது” என அறிவித்துள்ளார்.
இதன் மூலம் திமுகவும் அதன் தலைவர் ஸ்டாலினும் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலில் பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதில் ஸ்டாலின் மிக முக்கிய பங்கு வகிப்பார் என்கிற சூழல் உருவாகி உள்ளது.
#stalinwithrahulgandhi #Dmk_leader_stalin  #rahul gandhi #Dmk_Congress_alliance

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*