தீபாவளி பட்டாசு – நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு!

அன்றங்கே ஒரு நாடிருந்ததே -பாடல்!

சர்கார் படத்தை முடக்க சதி- விஜய் ரசிகர்கள் மீது தடியடி, வழக்கு!

உச்சநீதிமன்றம் ஒதுக்கிய நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்த நூற்றுக்கானவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.
தீபாவளி பண்டியையொட்டி பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை மீறுகிறவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் 6 மாத சிறையும் விதிக்கப்படும் என அறுவுறுத்தப்பட்டிருந்தது.
பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று குறிப்பிட்ட நேரத்தை மீறி வெடி வெடித்ததாக நெல்லையில் 6 பேரும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் 8 பேரும், கோவையில் 30 பேரும், விழுப்புரத்தில் 80 பேர், திருப்பூரில் 57 பேர் , என நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ராசிபுரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை சேரன்மாதேவியில் பட்டாசு வெடித்த 20 சிறுவர்களை போலீசார் பிடித்துச் சென்றனர். பின்னர் பெற்றோர்களிடம் எழுதி வாங்கி விட்டு சிறுவர்களை விடுதலை செய்தனர்.
இந்நிலையில், பட்டாசு வெடிப்பது தொடர்பான அச்சம் நிலவுவதால் பொது மக்கள் வேக வேகமாக ஒரே நேரத்தில் பட்டாசுகளைக் கொளுத்தியதால் சென்னை புகை மண்டலமாக மாறியது.

#Diwalli #தீபாவளி_பட்டாசு #தீபாவளி_கொண்டாட்டங்கள்

 

#Man_Animal_Conflict கும்பல் மன நிலை -பெண் புலியை அடித்துக் கொன்ற மக்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*