தீபாவளி -330 கோடிக்கு மது விற்பனையில் சாதனை!

கேரளாவுக்கு சபரிமலை- கர்நாடகாவுக்கு திப்பு சுல்தான் வேகமாக வெறியெடுக்கும் மத அரசியல்!

தீபாவளி பட்டாசு – நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்றே நாட்களில் 330 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை செய்து டாஸ்மாக் சாதனை படைத்துள்ளது.

பொங்கல், புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகைக்காலங்களில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கமானதுதான். ஒவ்வொரு ஆண்டும் இலக்கு வைத்து மது விற்பனையை நடத்துகிறது தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக். இந்த ஆண்டு 350 கோடி அளவுக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த ஆண்டு தீபாவளிதான் நான்கு நாள் விடுமுறையாக வந்தது. அதாவது வார இறுதி நாளான சனி, ஞாயிறுக்கிழமைகளோடு திங்கட்கிழமை அரசு விடுமுறை அறிவிக்க செவ்வாய் கிழமை தீபாவளி என தொடர்ந்து நான்கு நாள் விடுமுறை கிடைத்ததால் குடி பிரியவர்கள் டாஸ்மாக் கடைகளை மொய்த்தனர். பட்டாசு கடைகளை விட மதுக்கடைகளில்தான் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 330 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு 260 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடந்த நிலையில் இந்த ஆண்டு 70 கோடி ரூபாய்க்கு மது விற்பனை அதிகரித்துள்ளது.
அரசின் மற்ற துறைகளில் வருவாய் வீழ்ச்சி அதிகரித்துச் செல்லும் நிலையில் மது விற்பனையில் புதிய இலக்கை எட்டியுள்ளது டாஸ்மாக்.

#Diwali #Tasmac #டாஸ்மாக் #மதுவிற்பனை #குடிமக்கள் #Tamil_news #Tamil_current_news #tn_news #tnpolitical

அன்றங்கே ஒரு நாடிருந்ததே -பாடல்!

சர்கார் படத்தை முடக்க சதி- விஜய் ரசிகர்கள் மீது தடியடி, வழக்கு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*