தெற்கிலிருந்து துவங்கும் தேர்தல் போர்- பெரம்பலூரில் பிரகடனம் செய்த ஸ்டாலின்!

“120 கோடி மக்களை முட்டாளாக்கிய மோடி” – ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டம்!

நாளை ஸ்டாலினை சந்திக்கிறேன் -சந்திரபாபு நாயுடு!

ஜமால் கசோக்கி கொலை -இஸ்ரேல் நிறுவனத்திற்கு தொடர்பு- எட்வர்ட் ஸ்னோடென் தகவல்!

திமுக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று பெரும்பலூரில் நடந்த பொதுக்கூட்டம் திமுகவுக்கு வரலாற்று திருப்புமுனையான பொதுக்கூட்டம் ஆகும். அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்  “120 கோடி இந்திய மக்களை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் முட்டாளாக்கினார் மோடி. கருப்பு பணத்தை மீட்டு உங்களுக்கு 15 லட்சம் கொடுப்பேன் என்றார். 15 ஆயிரம் ரூபாயாவது, அல்லது 15 ரூபாயாவது உங்களுக்கு கொடுத்தாரா? மாநிலத்தில் ஆளும் இந்த அரசை ஊழல் செய்ய அனுமதித்து பாதுகாக்கிறார் மோடி. மத்தியில் உள்ள பாசிச பாஜகவை வீழ்த்த ஒரு போர் மாநிலத்தில் உள்ள  ஊழல் அதிமுகவை வீழ்த்த ஒரு போர் என்று தனித்தனி போரை நடத்த முடியாது. ஒரே போர்தான் அது  தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு. அதில் மத்திய ஆட்சியும் மாநில ஆட்சியும் வீழும்”என்று பேசினார்.

தேசிய அளவில் பாஜக அரசுக்கு எதிராக கட்டப்படும் அணியில் ஸ்டாலின் முக்கியத்துவம் பெறுகிறார். சந்திரபாபு நாயுடு இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார். நாளை திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கிறார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியின் 40 தொகுதிகள்தான் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கப் போகிறது.

திமுகவைப் பொறுத்தவரை  சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தி இரண்டிலும் வென்றுகாட்டும்  வெறியில் இருக்கிறது. எனவே அமையவிருக்கும் கூட்டணி இரண்டு தேர்தலுக்கும் சேர்த்துதான். அதில் காங்கிரஸ், இடதுசாரிகள் வலிமையாக இருக்கிறது. வழக்கமாக தேர்தல் நேரம் வந்தால் தடுமாறும் இடதுசாரிகள் கூட நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று தினகரனுக்கு பதில் சொல்கிறார்கள்.

ஆக, தமிழகத்தில் திமுக வலிமையாக எழுந்து நிற்கிறது. மாநில அரசை காப்பாற்றும் மோடிக்கு பதில் சொல்லி ஓபிஎஸ்-இபிஎஸ் குழுவுக்கும் பதில் சொல்லும் நாளுக்காக திமுக தன்னை தயார் படுத்திக் கொண்டுள்ளது.

படேல் சிலை முட்டாள்தனமானது – பிரிட்டன் விமர்சனம்!

’சர்கார்’ போஸ்டர் கிழிப்பு -ஒருவர் மரணம் கொலையா தற்கொலையா?

 

#பெரம்பலூர்_திமுக_கூட்டம்  #பெரம்பலூர்_திமுக #பாசிச-பாஜக_ஒழிக #DMK_National_Politics #mk_stalin #Anna_arivalayam #DMK_CONGRESS_Alliance

#sarkar “நல்ல கதையா திருடுங்கடா” சர்காரை சீண்டும் எச்.ராஜா?

’சர்கார் நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

தீபாவளி -330 கோடிக்கு மது விற்பனையில் சாதனை!

கேரளாவுக்கு சபரிமலை- கர்நாடகாவுக்கு திப்பு சுல்தான் வேகமாக வெறியெடுக்கும் மத அரசியல்!

இலங்கை அரசியல் திருப்பம் -பிரதமரானார் ராஜபக்சே!

மேல்முறையீடும் தினகரன் எதிர்காலமும்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*