தெலங்கானா தேர்தலில் ஓவைசிக்கு எதிராக முஸ்லீம் பெண்ணை நிறுத்திய பாஜக!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் சந்திராயன்குட்டா தொகுதியில் போட்டியிடும் அக்பருதீன் ஓவைசிக்கு எதிராக சையத் ஷாஹேஜாடி என்ற முஸ்லீம் வேட்பாளரை பாஜக நிறுத்தியுள்ளது.
அனைத்திந்திய மஜ்லிஸ்- இ – இட்டெஹாதுல் முஸ்லீம் கட்சி தலைவரான ஓவைசி பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்திய அளவில் முஸ்லீம் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராகவும் உள்ளார். இதே கட்சியைச் சேர்ந்த அவரது சகோதரர் அக்பரூதீன் ஓவைசி சந்திராயன்குட்டா தொகுதின் சட்டமன்ற உறுப்பினராக 1999, 2004,2009,2014 ஆண்டுகளில் போட்டியிட்டு வென்றுள்ளார். மக்கள் செல்வாக்குள்ள இவரை வீழ்த்த பாஜக சையத் ஷாஹேஜாடி என்ற முஸ்லிம் பெண்ணை வேட்பாளராக பா.ஜ.க. களமிறக்கி உள்ளது. ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் பயின்ற பட்டதாரியான சையத் ஷாஹேஜாடி அகில பாரத வித்யா பரிஷத் மாணவர் அமைப்பில் செயல்பட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.டிசம்பர் 7 -ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பெண் வேட்பாளர் என்பதாலேயே ஷாஹேஜாடி வெல்வரா என்பது கேள்விக்குறிதான். காவிகளின் நிழலில் வாக்குக் கேட்கும் அவரை முஸ்லீம் மக்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குறிதான்?
#BJPfields #SyedShahezadi #AkbaruddinOwaisi #Telangana_Elaction

#நிர்மலாதேவி விவகாரம் -“யாரோ சிலரை காப்பாற்றுகிறார்கள்” -பேரா. மனைவி குற்றச்சாட்டு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*