கரையை தொடும் ‘கஜா’ புயல்!

தமிழக கரையை ஒட்டி உருவாகி உள்ள கஜா புயல் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு புயல் குறித்த எச்சரிக்கைகள் பீதியை உருவாக்குகின்றன.
கஜா புயல் தொடர்பாக கடந்த இரு நாட்களாக ஊடகங்கள் பரபரப்புச் செய்தியை வெளியிட்டு வருகிறது. அரசியல் முக்கியத்துவம் உள்ள பல செய்திகள் இருந்தாலும் கஜா தான் ஊடகங்களை பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. கஜா புயல் தொலைக்காட்சிகளில்தான் வீசிக் கொண்டிருக்கிறது என்றும் இன்னும் சிறு காற்று கூட நாகப்பட்டினம் கரையோரத்தில் இல்லை என்றும் அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், வழக்கமாக வீசும் புயல்களை முன்கூட்டியே கணித்து மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டிய வானிலை ஆய்வு மையம் கடந்த ஆண்டு ஓக்கி புயலின் போது உரிய முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை. அதனால், 194 தமிழக மீனவர்கள் பலியானார்கள். கேரளத்திலும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியானார்கள். அது தமிழக அரசுக்கு அவப்பெயராக உருவான நிலையில் இப்போது கஜா புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை என்ற பெயரில் மக்களை முழுமையாக முடக்கியுள்ளார்கள்.

சபரிமலை பெண்வழிபாடு -தோல்வியில் முடிந்த அனைத்துக்கட்சி கூட்டம்!

டிச -16 கருணாநிதி சிலை திறப்பு- அகில இந்திய தலைவர்கள் வருகை!

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடம்?

ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் -”யார் இந்த பிர்சா முண்டா?

புயல் வீசும் பகுதிகளான கடலூர், நாகை, புதுச்சேரி, தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், இரவு 11 மணிக்கு கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட கஜா இன்னும் தாமதமாக கரையை கடக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

#kaja_cyclone #கஜாபுயல் #நாகை #தமிழக_புயல்

பழ.நெடுமாறனின் நூலை அழித்து விடுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம்!

ராஜபக்சே தோல்வி -வென்றார் ரணில்!

அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு தனி தலைமைச் செயலகம் -சுயாட்சிக்கு ஆபத்து!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*