நாடாளுமன்ற தேர்தலில் ராமர்கோவிலை முன்னிறுத்தும் பாஜக?

2 மணி நேரத்திற்கு மேல் வெடித்தால் தண்டனை?

பட்டேல் சிலை திறப்பு –ராகுல் விமர்சனம்! #ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி

பத்திரிகையாளர்கள் கொலை :மோசமான சாதனை படைத்த இந்தியா!

2019 -ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வட மாநில வாக்காளர்களைக் கவர ராமர்கோவில் பிரச்சனையை தங்கள் பிரதான கோஷமாக பாஜக முன்னிறுத்தும் என்று தெரிகிறது.
2014-ஆம் ஆண்டு வளர்ச்சி என்ற கோஷத்தை முன் வைத்து ஆட்சியைப் பிடித்த பாஜக அரசின் பிரதமராக மோடி பெரும்பான்மையுடன் பதவியேற்றார். ஆனால், பொருளாதார ரீதியாக அவர் முன்னெடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகள் இந்திய சிறுவணிகர்களையும், மக்களையும் துன்புறுத்திய நிலையில், பெட்ரோல், டீசல் விலையோ கண் மண் தெரியாமல் விலை உயர்ந்து செல்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால், இந்திய மக்கள் பெரும் திண்டாட்டங்களைச் சந்திக்கிறார்கள். வகை தொகையில்லாமல் அதிகரித்துச் செல்லும் விலைவாசி உயர்வும் வருமான வீழ்ச்சியும் மோடி அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் கோட்டைகள் எனப்படும் ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் நினைத்த அளவு பாஜகவால் வெற்றி பெற முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளதால்.
இந்து உணர்ச்சியை மக்களிடையே உருவாக்க மீண்டும் பாஜக முயல்கிறது. உள்ளூர் அளவில் பேசி வந்த இந்து உணர்ச்சியை இந்திய அளவில் உருவாக்க பாஜக திட்டமிடுகிறது. நாக்பூரில் நடந்த விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என்றார். தேசத்தின் பெருமை சார்ந்த விஷயம் ராமர் கோவில் என்றும் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.
இப்போதைய ஆட்சி முடிந்து விட்ட நிலையில் அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டுவோம் என்பதை கோஷமாக வைத்து நாடு முழுக்க எழுச்சியை உருவாக்க பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

#Ram_Temple #Ramar_kovil #ராமர்_கோவில்

பாஜக தலைவர்கள் தமிழகத்தின் வரப்பிரசாதம் -பெருமித பொன்னார்

கதை திருட்டும் ஒரு மலையாள சினிமாவும் -மருதம்!

பட்டேல் சிலை – “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” தமிழுக்கு மரியாதை செய்த மோடி!

இந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள்-VIDEO!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*