#நிர்மலாதேவி விவகாரம் -“யாரோ சிலரை காப்பாற்றுகிறார்கள்” -பேரா. மனைவி குற்றச்சாட்டு!

மாணவிகளை உயரதிகாரிகளின் பாலியல் தேவைகளுக்காக பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட விருதுநகர் தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியின் வாக்குமூலம் சில நாட்களாக வெளியாகி வந்தது. அதில் நிர்மலா தேவி மட்டுமே கெட்டவர், அவரும் இந்த வழக்கில் கைதாகி உள்ள முருகன், கருப்பசாமி ஆகியோருமே இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள வேறு அதிகாரிகளுக்கோ, கவர்னர் மாளிகைக்கோ தொடர்பில்லை என்பது போன்று இருந்தது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீனும் கிடைக்கவில்லை. இந்த விசாரணயையே ரகசிய விசாரணையாக நடத்த வேண்டும் என்று சிபிசிஐடி கோரியிருந்தது. இந்நிலையில், பேராசிரியர் முருகனின் மனைவி மதுரையில் பேட்டி அளித்தார் அப்போது:-
“ நிர்மலா தேவி என் கணவருக்காகத்தான் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் பொய் வாக்குமூலம் தயாரித்துள்ளனர். நிர்மலாதேவி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வந்த போது அவர் தங்க அறை ஒதுக்குவது பற்றி கேட்ட போது கருப்பசாமியிடம் கேட்டுக் கொள்ளுமாறு என் கணவர் கூறியிருக்கிறார். பிரச்சனை பெரிதான போது என் கணவரிடம் நிர்மலா தேவி உதவி கேட்டார் அப்போது கூட “நீங்கள் யாருக்காக மாணவிகளிடம் பேசினீர்களோ அவர்களிடமே போய் உதவி கேட்டுக் கொள்ளுங்கள் என்னால் முடியாது” என்றார்.
என் கணவர் எப்போதுமே நிர்மலாவுக்கு பேசியது கிடையாது அப்படி இருக்கும் போது அவருடன் என் கணவர் தவறான உறவு வைத்திருந்தார் என்று போலீசார் பொய்யான வாக்குமூலம் மூலம் ஜொடிக்கின்றனர்.நிர்மலாதேவி மதுரைக்கு வந்த போது அவரை வரவேற்க முக்கிய அதிகாரியின் காரை அனுப்பினார்கள். மேலும் சில பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு நிர்மலாதேவியுடன் நேரடியான தொடர்பு இருந்தது.இந்த வழக்கில் நேரடியான எந்த தொடர்பும் இல்லாத என் கணவரை குற்றவாளியாகக் காட்டுவது ஏன்?
கொலை, கொள்ளை வழக்குகளில் கைதானவர்களுக்குக் கூட சில நாட்களிலேயே ஜாமீன் கிடைக்கிறது. ஆனால், எந்த தவறும் செய்யாத என் கணவர் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் ஆகியும் ஜாமீன் கிடைக்கவில்லை.இந்த வழக்கில் 3 பேரை மட்டும் சிக்க வைத்துவிட்டு, மற்றவர்களை முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வைத்துவிட்டனர். என் கணவரையும் நிர்மலா தேவியையும் மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.இது முழுக்க முழுக்க யாரோ சிலரைக் காப்பாற்ற என் கணவரை ஜாமீனில் விடாமல் உள்ளே வைத்திருக்கிறார்கள். தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் வாய்ப்பு கூட அவருக்கு மறுக்கப்படுகிறது” என்றார் முருகனின் மனைவி.
#Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege #பன்வாரிலால்_புரோகித் ##NakkeeranGopal
#BanwarilalPurohit #nakkeeran #DMK DMK – Dravida Munnetra Kazhagam M. K. Stalin #NakkeeranGopal #pervertgovernor #banwarilalpurohit #tnpolice #tnpoliceatrocities #tngovernment

மோடியை மன்னித்து விடக்கூடாது -யஷ்வந்த் சின்ஹா!

ராமர்கோவில் – உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்!

எழுவர் விடுதலை முடிவெடுக்காமல் தள்ளிப்போடும் ஆளுநர்?

நிர்மலா தேவி வாக்குமூலம் -மறைக்கப்பட்ட உண்மைகள்?

#ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் ராமர்கோவிலை முன்னிறுத்தும் பாஜக?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*