நிர்மலா தேவி வாக்குமூலமும் ரகசிய விசாரணையும்?

#ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் ராமர்கோவிலை முன்னிறுத்தும் பாஜக?

கடந்த இரு நாட்களாக நிர்மலா தேவி வாக்குமூலம் என்று  சில ஊடகங்களில் வெளிவருகிற செய்திகள் யாரையோ காப்பாற்றும் நோக்கில் திட்டமிட்டு பரப்பப்படும் செய்திகளாகவே உள்ளது.

பார்க்கிற ஆண்களுடன் எல்லாம் நிர்மலா தேவி படுக்கையை பகிர்ந்து கொள்வார். இந்த வழக்கில் கைதாகி உள்ள முருகன், கருப்பசாமி ஆகியோருக்காக நான்கே நான்கு மாணவிகளிடம் பேசினார் (நான்கு ஆடியோக்கள்தான் வெளியானது) ஆனால், 30-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான  மாணவிகள் பாலியல் பேரங்களுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று சி,பி.சி.ஐ.டி போலீஸ்  இந்த வழக்கை  திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்காமல் ரகசிய விசாரணையாக மூடப்பட்ட நீதிமன்றத்தினுள் நடத்த வேண்டும் என மனுத்தாக்கல்  செய்துள்ளது. பாலியல், மாணவிகள், என இருப்பதால் ரகசிய விசாரணை நடத்த வேண்டும் என்பது போலீஸ் கோரிக்கை. ஆனால், நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் திறந்த நீதிமன்றத்தில்தான் இந்த வழக்கை நடத்த வேண்டும். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிர்மலாதேவி விவகாரத்தில் துவக்கம் முதலே சிலரைக் காப்பாற்றும் முயற்சி நடக்கிறது. இத்தனை மாதம் அவர்களுக்கு  ஜாமீன் வழங்காமல் சிறையில் அடைத்து வைத்திருப்பதே அநீதியானது. இந்த வழக்கை மூன்று பேருடன் நிறுத்திக் கொண்டு பலரைக் காப்பாற்றுவதற்கான  சதியின் ஒரு பகுதியாகவே ரகசிய விசாரணை கோரிக்கை முன் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

#Nirmala_Devi #நிர்மலா_தேவி #மாணவிகளிடம்_பேரம் #power_proking

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*