நிர்மலா தேவி வாக்குமூலம் -மறைக்கப்பட்ட உண்மைகள்?

நிர்மலாதேவி_ஆளுநர்_முழுவிபரங்கள்

#ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் ராமர்கோவிலை முன்னிறுத்தும் பாஜக?

மாணவிகளை பாலியல்  ரீதியாக இணங்கிச் செல்ல பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ  வெளியானதால் அவர் கைது செய்யப்பட்டார். அவரோடு உதவிப்பேராசியர் முருகன், கருப்பசாமி என மூவர் மட்டும் வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெயரும் அடிபட்டது. இது தொடர்பாக நக்கீரன் இதழ் கட்டுரை வெளியிட்டதால் அதன் ஆசிரியர் கோபாலும் கைது செய்யப்பட்டார்.. அந்தக் கட்டுரை இதுதான்

இந்நிலையில், இப்போது நிர்மலா தேவியின் வாக்குமூலம் என்று நாளிதழ் ஒன்று இரு நாட்களாக கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வாக்குமூலங்களைப் படிக்கிறவர்களுக்கு நிர்மலா தேவி பார்க்கிறவர்கள் அனைவருடனும் படுக்கையை பகிர்ந்து கொள்கிறவர். முருகன், கருப்பசாமியோடும் அவருக்கு தொடர்பு இருந்தது. அவர்களுக்காகவே மாணவிகளை பேரம் பேசினார் என்ற புரிதல் ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான வார்த்தைகளுடன் வெளியான நிர்மலா வாக்குமூலத்தின் உள்ளடக்கம் இதுதான்.

ஆனால், இந்த வாக்குமுலங்கள் யாரைக் காப்பாற்றுகின்றன. இந்த வழக்கில் தொடர்புடைய பலரையும் போலீசார் கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்டுள்ள மூவருக்குமே ஜாமீனும் வாழங்கப்படவில்லை. போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வாக்குமூலத்தின் நம்பகத்தன்மை என்ன என்கிற கேள்விக்கும் பதில் இல்லை.

ஒரு  உதவிப்பேராசியருக்காக நூற்றுக்கணக்கான மாணவிகளுடன் நிர்மலா தேவி பேரம் பேசினார் என்பது நம்பும் படியாக இல்லை. மாணவிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்ட விவகாரத்தில் பலருக்கும்  தொடர்பிருக்கிறது. குறிப்பாக ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவருக்கும் தொடர்பிருக்கிறது. இந்த வழக்கை நிர்மலா தேவி, கைதாகியுள்ள இருவர் என மூன்று பேருடன் முடிக்க விரும்பும் அதிகார பீடங்கள் தங்களுக்கு ஏற்ற ஒரு வாக்குமூலத்தை அவரிடம் இருந்து பெற்றிருக்கலாம். அல்லது, அவரிடம் பெற்ற வாக்குமூலத்தில் தங்களுக்கு ஆபத்தான பகுதிகளை நீக்கம் செய்து விட்டு சாதகமான சில பெயர்களை இணைத்திருக்கலாம்.

இந்த வாக்குமூலம் போலியானது என  உதவி பேராசிரியர் முருகன் கூறியிருக்கும் நிலையில் இவர்கள் மூவருக்குமே ஜாமீன் கிடைத்தால்தான் உண்மை வெளியுலகிற்கு தெரியவரும். காரணம் இந்த வழக்கில் கைதாகியுள்ள நால்வரைத் தாண்டி இந்த வழக்கு நகர்ந்து விடக்கூடாது என்பதில் சிலர் குறியாக இருக்கிறார்கள். அது போல நிர்மலா தேவி பேசியதாக வெறும் நான்கே நான்கு மாணவிகளின் ஆடியோக்கள்தான் வெளியாகின. ஆனால், ரகசிய விசாரணையில் பல மாண்விகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், வெளியான நான்கே நான்கு பெண்களைத் தவிற வேறு யாரிடமும் நான் பேசவில்லை என்று நிர்மலா தேவி கூறியதாக வெளியாகும் வாக்குமூலங்களும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இந்த வழக்கு ஆளும் அதிகார பீடங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நிர்மலாதேவியின் உயிருக்கே ஆபத்து நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது.

#NakkeeranGopal #NakkeeranGopal #MKStalin #BanwarilalPurohit #nakkeeran #DMK DMK – Dravida Munnetra Kazhagam M. K. Stalin #NakkeeranGopal #banwarilalpurohit #tnpolice #tnpoliceatrocities #tngovernment

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

தோல்வியை மறைக்க முயல்கிறார் மோடி- ஸ்டாலின் காட்டம்!

2 மணி நேரத்திற்கு மேல் வெடித்தால் தண்டனை?

பட்டேல் சிலை திறப்பு –ராகுல் விமர்சனம்! #ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி

பத்திரிகையாளர்கள் கொலை :மோசமான சாதனை படைத்த இந்தியா!

பாஜக தலைவர்கள் தமிழகத்தின் வரப்பிரசாதம் -பெருமித பொன்னார்

கதை திருட்டும் ஒரு மலையாள சினிமாவும் -மருதம்!

பட்டேல் சிலை – “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” தமிழுக்கு மரியாதை செய்த மோடி!

இந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள்-VIDEO!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*