பணமதிப்பிழப்பு – வேலையின்மை பல மடங்கு அதிகரிப்பு-ஆய்வில் தகவல்!

ஆரியத்தை கதிகலங்கவைத்த அண்ணாவின் நீதிதேவன் நாடகத்திருந்து ஒரு காட்சி – ஆழி.செந்தில்நாதன்!

‘கஜா’ கடும் புயலாக இருக்கலாம் -எச்சரிக்கை!

அமித்ஷா தன் பெயரை இந்து பெயராக மாற்றிக் கொள்ள வேண்டும் – இர்பான் ஹபீப்!

தீவிரவாதம், கருப்புப்பணம், கள்ளநோட்டு உள்ளிட்ட மூன்று காரணங்களுக்காக 2016-நவம்பர் மாதம் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் சி.எம்.ஐ.இ (CMIE) என்னும் பொருளாதார கண்காணிப்பு நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டில் வேலையின்மை 6.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2018 -ஆம் ஆண்டு நாட்டின் ஒட்டு மொத்த மக்கட் தொகையில் 42.8 சதவீதத்தினருக்கு மட்டுமே வேலை இருப்பதாக சி.எம்.ஐ.இ ஆய்வில் தெரியவந்துள்ளது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கடந்த இரு ஆண்டுகளில் உழைக்கத் தயாராக இருப்பவர்களின் விகிதமானது குறைந்துள்ளது என்கிறது ஆய்வு. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் 47 சதவீதம் முதல் 48 சதவிகிதத்தில் இருந்தது, ஆனால் அதற்குப் பிறகு, இது வீழ்ச்சியடைந்து உள்ளதாக ஆய்வின் படி குறிப்பிடுகிறது.
2017-ஆம் ஆண்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை 2.16 கோடியாக இருந்தது, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2.95 கோடியாக அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 1.2 கோடி மக்கள் தொழிலாளர்களாக மாறுகின்றனர். ஆனால் அதற்கு ஏற்றவாறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதாலேயே வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பல்வேறு சிறு தொழில்கள் வீழ்ச்சியடைந்த காரணத்தால் வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் அதிகரித்துள்ளது.

#Demonetisation #2016_Demonetisation #Modi_Govt_Demonetisation #2016_Indian_banknote_demonetisation #பணமதிப்பிழப்பு #மோடி_அரசு #வேலைவாய்ப்பின்மை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*