பழ.நெடுமாறனின் நூலை அழித்து விடுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம்!

திமுகவை விரும்பும் காங் -தேசிய அளவில் முக்கியத்தும பெறும் திமுக!

இறையாண்மைக்கு எதிராக கருத்துக்கள் உள்ளதாகக் கூறி பழ.நெடுமாறன் எழுதிய ‘தமிழீழம் சிவக்கிறது’ என்ற நூலின் பிரதிகளை அழித்து விடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்திய அமைதிப்படை இலங்கையின் தரித்து நின்ற அனுபவங்களின் அடிப்படையிலு, பழ. நெடுமாறன் ஈழப் போராளிகளை சந்தித்து வந்த அனுபவங்களையும், சுமர் 500 பக்கங்களில் பழ. நெடுமாறன் “தமிழீழம் சிவக்கிறது” என்ற நூலை எழுதினார். அந்நூலில், இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய மனித உரிமை மீறல்களை பிரதானமாக அப்திவு செய்திருந்தார். இந்திய இறையாண்மையை அவமதிப்பதாகக் கூறி இந்நூல் தடை செய்யப்பட்டது. இந்நூல் ஈழத்தமிழரிடையே மிக முக்கியமான நூலாக கருதப்பட்டது.
இந்நூலை எழுதியமைக்காக தமிழக அரசு நெடுமாறனை கைது செய்தது. அவர் அந்த வழக்கில் இருந்து விடுதலையும் செய்யப்பட்டார். ஆனால், அந்த நூலின் பிரதிகள் தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டன.வழக்கில் இருந்து விடுதலையான நெடுமாறன் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நூலை தன்னிடம் வழங்குமாறு வழக்குத் தொடர்ந்தார்.18 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி முரளீதரன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி எஞ்சியிருக்கும் நூலின் பிரதிகளை அழித்து விடுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
தடை செய்யப்பட்ட அமைப்புகளை ஆதரிப்பது தொடர்பாக வைகோ தொடர்புடைய வழக்கு ஒன்றில் தடை செய்யப்பட்ட அமைப்புகளை ஆதரிப்பது தவறு ஆகாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வைகோ நாடாளுமன்றத்தில் ராஜீவ்காந்தியையே நடுங்க வைத்திருக்கிறார். ‘சாத்தானின் படைகள்’ என்ற நூலும் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளது.இந்திய அமைதிப்படை நடத்திய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணங்கள் சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்களால் விவாதிக்கப்பட்டவை. என்னும் நிலையில், ஒரு நூலை அழித்து விடுமாறு உத்தரவிடுவது அறிவை கொலை செய்வதற்கு நிகரானது. மற்றபடி ஒரு படைப்பாளர் ஒரு நூலை எழுதி சமூகத்தில் வைக்கிறான். மக்கள் வேண்டுமென்றால் அதை எடுக்கிறார்கள் இல்லை என்றால் விட்டு விடுகிறார்கள் அவ்வளவே!
#Tamil_Eeelam #ஈழம்  #தமிழீழம்_சிவக்கிறது #நெடுமாறன்_பழ #தமிழ்தேசியம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*